தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 26 augustus 2013

யாழ் சிறைச்சாலையில் அதி நவீன தொலைபேசிகள் மீட்பு

ஐக்கிய நாடுகள் சபை பக்கச் சார்பானது!– ஜேவிபி குற்றச்சாட்டு
[ திங்கட்கிழமை, 26 ஓகஸ்ட் 2013, 02:44.07 AM GMT ]
ஐக்கிய நாடுகள் சபை பக்கச் சார்பான அமைப்பு அந்த அமைப்பு மேற்கத்தைய நாடுகளின் அட்டவணைகளுக்கு ஏற்பவே செயற்படுகிறது என்று ஜேவிபி குற்றம் சுமத்தியுள்ளது.
ஜே வி பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க கொழும்பின் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ள கருத்தில் அண்மைக்காலமாக ஐக்கிய நாடுகள் சபை,  அமெரிக்காவையும் மேற்கத்தைய நாடுகளையும் சந்தோசப்படுத்தவே செயற்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள அமெரிக்கர்கள் உட்பட்டவர்கள் போருக்கு முதலிடம் கொடுப்பவர்கள் என்றும் அநுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் ஐக்கிய நாடுகளின் கீழ் தமது இறைமை பாதுகாக்கப்படும் என்று எந்த நாடும் எதிர்பார்க்க முடியாது என்று அநுரகுமார குறிப்பிட்டுள்ளார்.
யாழ் சிறைச்சாலையில் அதி நவீன தொலைபேசிகள் மீட்பு
[ திங்கட்கிழமை, 26 ஓகஸ்ட் 2013, 02:40.58 AM GMT ]
யாழ்ப்பாண சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்களிடம் அதி நவீன தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன. 
12 அதி நவீன தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச ரீதியில் புலி முகவர்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் தகவல்களை வழங்க புலிச் சந்தேக நபர்கள் இந்த செய்மதி தொலைபேசிகளைப் பயன்படுத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தத் தொலைபேசிகளைப பயன்படுத்தி நவனீதம்பிள்ளையுடன் தொடர்புகொள்ள கைதிகள் திட்டமிட்டிருந்தனர்.
வெலிக்கடை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்களை நவனீதம்பிள்ளை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை சென்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று யாழ்ப்பாணம் செல்லவுள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகின்றமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten