தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 22 augustus 2013

வெலிவேரியா இராணுவ விசாரணை அறிக்கை கையளிக்கப்பட்டது- அரச பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது


கொழும்பின் புறநகர் வெலிவேரியரில் இராணுவ துப்பாக்கி சூட்டில் மூன்று பொதுமக்கள் பலியான சம்பவம் தொடர்பில் இராணுவம் மேற்கொண்ட விசாரணை முடிவடைந்துள்ளது.
இந்தநிலையில் இராணுவ நீதிமன்றத்தின் அறிக்கை இராணுவ தளபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதனை இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த முதலாம் திகதி குடிநீருக்காக போராட்டம் நடத்தியவர்கள் மீது இராணுவம் சுட்டதில் மூன்று பொதுமக்கள் கொல்லப்;பட்டதுடன் பலர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் இராணுவத்தினர் மீது பலரும் விமர்சனங்களை வெளியிட காரணமாக இருந்தது.
இதனையடுத்தே இராணுவத்தினர் விசாரணையை மேற்கொண்டனர்.
எனினும் இராணுவத்தினர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் இராணுவத்தினரே விசாரணை மேற்கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாது என்று பல தரப்புக்களும் கருத்து தெரிவித்து வந்தன.
அரச பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது- ரஞ்சன் ராமநாயக்க
அரச பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
வெலிவேரியவில் மாணவர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு நகைச் சுவையாக அமைந்துள்ளது.
அரச பயங்கரவாதம் தலைதூக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் நிறுவப்பட்ட ஆணைக்குழுக்கள் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டன.இந்த அரசாங்கம் போரை வென்றது அதனை நாம் ஏற்றுக் கொள்கின்றோம்.
எனினும் போர் வெற்றியை பகிர்ந்து கொள்ள ஆளும் கட்சியினர் போராடுகின்றனர்.

“கோதாஸ் வோர்” என்கிறார்கள் புத்தகம் அச்சிடுகின்றார்கள். அன்று போர் செய்ய உத்தரவிட்டதனைப் போன்று ரத்துபஸ்வல சம்பவத்தின் போது துப்பாக்கிச் சூடு நடாத்த யார் உத்தரவிட்டது என ரஞ்சன் ராமநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRWMVhr2.html#sthash.wDp23hzq.dpuf

Geen opmerkingen:

Een reactie posten