[ வியாழக்கிழமை, 22 ஓகஸ்ட் 2013, 06:42.02 AM GMT ]
காலியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் பொருளாதார அரசியல் ஆலோசகரான மேகன் ஃபொஸ்ரர் அம்மையார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டத் தலைமைப் பணிமனையான “அறிவகத்தில்” பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் உள்ளிட்ட குழுவினரை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், மகிந்த ராஜபக்ஷ யுத்தத்தை வெல்லவில்லை. அவர் யுத்தத்தை மட்டுமே செய்தார்.
யுத்தத்தில் வென்றிருந்தால் தேசியப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் கலந்துரையாடல்களுக்கு அவசியம் இருக்காது.
இவர்கள் யுத்தத்தை முடித்து விட்டு மஹாராஜா என்று கூறியபடி பாடல்களை பாடிக் கொண்டிருந்தனர். எனினும் பிரச்சினைக்கான தீர்வை தேடவில்லை.
ஜனாதிபதிக்கும் விமல் வீரவன்ஸவுக்கும் சிங்கள இனவாதத்தை தவிர வேறு தீர்வுகள் எதுவுமில்லை. இலங்கையின் ஐக்கியம் இவர்களுக்கு கசந்து போய்விட்டது.
ஹக்கீம் ஒரு முஸ்லிம் இனவாதி, சம்பந்தன் ஒரு தமிழ் இனவாதி, விக்னேஸ்வரனுக்கும் அதனை விட்டால் வேறு உலகமில்லை.
மகிந்தவின் 18வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு பின்னர், இந்த அரசியல் அமைப்புச் சட்டத்தை ஜே.ஆர். ஜயவர்தனவின் அரசியல் அமைப்புச் சட்டம் என்று கூறமுடியாது.
தற்போது இருப்பது தனி நபரின் அதிகாரத்தை உறுதிப்படுத்திய அரசியல் அமைப்புச்சட்டம். நாட்டின் உடமைகளையும் சொத்துக்களையும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுதி கொடுக்கும் அரசியல் அமைப்புச்சட்டம்.
உலகத்தில் கடனை பெற்றாவது நாட்டை ஈடுவைத்தாவது, அதிகாரத்தில் இருப்பதற்காக உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டம்.
இனப்பிரச்சினைகளை ஏற்படுத்தும் தேவை சிலருக்கு உள்ளது. இதனால் அவர்கள் அந்த சேனா, இந்த சேனா என்று பல அமைப்புகளை உருவாக்கியுள்ளனர். மக்களை இதனை கண்டு ஏமாந்து விடக் கூடாது என்றார்.
த.தே.கூட்டமைப்பின் தலைமைப் பணிமனை “அறிவகத்தில்” முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன், பா.உறுப்பினர் சிறீதரனை கனேடிய ஆலோசகர் சந்திப்பு
[ வியாழக்கிழமை, 22 ஓகஸ்ட் 2013, 09:00.28 AM GMT ]
சுமார் ஒரு மணித்தியாலம் நீடித்த இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வட மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன், கரைச்சிப் பிரதேச சபைத் தவிசாளர் நா.வை குகராசா, வட மாகாண சபைக்கான கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர் த.குருகுலராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட இளைஞரணித் தலைவர் சு.சுரேன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இச்சந்திப்பில் வட மாகாண சபைத் தேர்தல் வன்முறைகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளிடம் மேகன் ஃபொஸ்ரர் அம்மையார் கேட்டறிந்து கொண்டார்.
இதன் போது அண்மையில் நடைபெற்ற தேர்தல் வன்முறைச் சம்பவங்கள், பூநகரிப் பகுதியில் குடும்பப் பெண் ஒருவர் பச்சை உடை தரித்தோரால் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட சம்பவம், தமிழ் இளைஞன் ஒருவன் பரந்தன் பகுதியில் தாக்கப்பட்டமை மற்றும் நெடுந்தீவில் ஈபிடீபி ஒட்டுக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட அராஜகங்கள் குறித்தும் அவருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
மேலும் வட மாகாண சபைத் தேர்தல் குறித்து அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் மேகன் ஃபொஸ்ரர் அம்மையார் கலந்துரையாடியதுடன் தாங்கள் வடமாகாண சபைத் தேர்தலை உன்னிப்பாக அவதானித்து வருவதாகக் குறிப்பிட்டார்.
Geen opmerkingen:
Een reactie posten