தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 28 augustus 2013

நவிப்பிள்ளை பிரயாணத்தை வெடிகுண்டாக மாற்ற கோட்டபாய திட்டமா ?

கோலம் போட்ட நவிப் பிள்ளை: யாழ் நூலகத்தில் சம்பவம் !
28 August, 2013 by admin
நேற்று முன் தினம் யாழ் நூலகத்திற்குச் சென்ற நவிப்பிள்ளை, அங்கு நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு பின்னர் பின் வாசலால் சென்ற விடையம் தொடர்பாக நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டு இருந்தோம். இதேவேளை யாழ் நூலகத்திற்குள் அவர் செல்லும் வேளை அங்கே போடப்பட்டு இருந்த கோலத்தை அவர் தற்செயலாக தனது கால்களால் தட்டிவிட்டார். இதனையடுத்து உடனே குனிந்து அங்கே விலகிக் கிடந்த கோலமா மற்றும் அரிசிகளைப் பொறுக்கி அப்படியே கோலம் போட ஆரம்பித்துவிட்டார். கோலத்தை சரிசெய்த பின்னரே அவர் கருத்தரங்கில் கலந்துகொள்ளச் சென்றார். நவிப்பிள்ளை கோலம் போடுவதை சிங்கள அதிகாரிகளும் மற்றும் ஆளுனரும் சிரிப்போடு பார்வையிட்டார்கள்(புகைப்படம் இணைப்பு) 


நவிப்பிள்ளை பிரயாணத்தை வெடிகுண்டாக மாற்ற கோட்டபாய திட்டமா ?
28 August, 2013 by admin
இங்கே நாம் எழுத இருப்பதை சற்றுக் கவனமாக வாசியுங்கள். இலங்கை சென்றுள்ள நவிப்பிள்ளை "முள்ளிவாய்க்கால் சென்றார்" அவர் "தமிழர்களுக்கு தீர்வு பெற்று தருவதாக வாக்குறுதி அளித்தார்" "சர்வதேச விசாரணை தேவை என்றார்" "மக்கள் குறைகளை கேட்டறிந்தார்" என்று நாள்தோறும் பரபரப்பான செய்திகள் தமிழில் வெளியாகியவண்ணம் உள்ளது. ஈழத் தமிழினத்தை காக்க வந்த கடவுள் இவர் தான் ! எங்களை காப்பாற்ற வந்த மீட்ப்பர் இவர்தான் ! என்று பல ஊடகங்கள் செய்திகளை தாறுமாறாக எழுதி வருகிறது. ஆனால் இதன் பின்னணியில் பாரிய சூழ்சிகள் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. காரணம் என்னவென்றால் 2009ம் ஆண்டு புலிகள் போரில் பாரிய பின்னடைவை எதிர்கொண்டவேளை, பல தமிழ் ஊடங்கள் அவர்கள் இப்படித் தாக்குவார்கள், அப்படி தாக்குவார்கள் என்று ஆரூடம் கூறியது. இதனால் கடைசி நாள் வரை புலிகள் இலங்கை இராணுவத்தை வெற்றிகொள்வார்கள் என்று பலர் நம்பினார்கள்.

இறுதியில் இலங்கை இராணுவம் போரில் வெற்றிகொண்ட வேளை இதன் காரணத்தால் தான் சிலர், சலிப்படைந்து போனார்கள். போரில் வெற்றி தோல்வி என்பது சகஜம். ஆனால் போராட்டத்தை நாம் அதற்காக விட்டுக்கொடுக்க முடியுமா ? அதுபோலவே தற்போதும் தமிழர்களைச் சுற்றி ஒரு மாயவலை பின்னப்பட்டு வருகிறது. சிலவேளை சிங்களம் அதில் வெற்றியும் அடையலாம். அது என்ன ? குறிப்பாக தமிழர்கள் நவனீதம் பிள்ளைமேல் ஓரளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அவர் தன்னால் இயன்றதைச் செய்வார் என்று நம்புகிறார்கள். ஆனால் அவரை மிகைப்படுத்தி செய்திகளை வெளியிடுவதன் மூலம், என்ன நடக்கும் என்று யோசித்தீர்களா ? செய்திகளை மிகைப்படுத்தி கூறும்போதும் தமிழர்கள் அவரை இன்னும்(மேலதிகமாக) தமிழர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். ஆனால் அவ்வாறு அவரால் செய்யமுடியாது. ஏன் எனில் அவர் ஒரு ஐ.நா அதிகாரி.அவ்வளவு தான். அவருக்கு என்று ஒரு வரைமுறை உள்ளது. எனவே தற்போது கூறுவதுபோல அவர் ஒரு தீர்வைப் பெற்றுத்தர இயலவே இயலாது.

மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை வாசிக்கும் தமிழர்கள், நவிப்பிள்ளையிடம் இருந்து அளவுக்கு மீறியே எதிர்பார்ப்பார்கள். அது இன்னும் சில மாதங்களில் நடக்காமல் போகலாம். அப்போது தமிழர்கள் என்ன கூறுவார்கள் என்று அனைவருக்கும் தெரியும். ஆம்.... நவிப்பிள்ளையும் பம்மாத்து தான் ! எங்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை ! அன்று அப்படி எல்லாம் சொன்னாரே ! இன்று ஒன்றுமே செய்யவில்லை என்று சலித்துக்கொள்வார்கள். இதனால் நவிப்பிள்ளைக்கு எதிராக சில தமிழர்கள் கடும்போக்கை கையாள, பிற்காலத்தில் அவர் தானாகவே இப் பிரச்சனையில் இருந்து பின்வாங்குவார். இல்லை என்றால் ஒதுங்கிக்கொள்வார். இதனை சாதூரியமாகச் செய்யவே சிங்களம் முயல்கிறது. உதாரணமாக நாம் ஒரு நபருடன் அளவாகப் பழகினால் , நீண்ட கால நட்புடன் இருக்கலாம். ஆனால் அவருடன் மிக நெருக்கமாகப் பழகி பலவற்றை அவரிடம் எதிர்பார்த்தால், வெறுப்புதான் மிஞ்சும். இதுபோல பப்பா கொப்பில் ஏற்றிவிட்டு தள்ளிவிடும் சூத்திரத்தை கரைத்துக் குடித்தவர் கோட்டபாய. ஆனால் அவர் திட்டங்களையும் அறியும் திறன் தமிழர்களுக்கு இல்லையா என்ன ?

எனவே நவிப்பிள்ளை அது செய்வார், இதனைச் செய்ய இருக்கிறார் என்று நாமே கற்பனைசெய்து எமது போராட்டத்தை ஆறப்போடத்தேவையில்லை. மற்றும் புலம்பெயர் நாட்டிலுள்ள பல அமைப்புகள், நவிப்பிள்ளையின் இலங்கை பயணம் பல நன்மைகளை தரும் என நினைத்து தமது செயல்பாடுகளை குறைத்திருப்பார்கள். ஆனால் நவிப்பிள்ளை எதனைச் செய்கிறாரோ அவர் அதனைச் செய்யட்டும். நாம் எமது போராட்டப்பாதையை தொடர்ந்துகொண்டு இருப்போம். எமது தேசிய தலைவர் யாரை நம்பி போராட்டத்தை ஆரம்பித்தார் ? தமிழீழத்தை வேறுயாரவது பெற்று தருவார்கள் என்று காத்திருந்தாரா ? அவர் தனது வழியை மாற்றவே இல்லை. எனவே எமது தேசிய தலைவரை நேசிக்கும் அனைவரும் ஒரு பாதையில் செல்வோம் !

அதிர்வுக்காக

வல்லிபுரத்தான்.

Geen opmerkingen:

Een reactie posten