நவீபிள்ளையை திருமணம் முடிக்க நான் தயார்: மேர்வின் நக்கல் !
28 August, 2013 by admin
மருதானையில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
இராவணன் முதல் விஜயகுமாரவிற்கு இடம்கொடுத்து குவேனியை திருமணம் முடித்துகொடுத்தவர்கள் நாம், நவனீதம்பிள்ளை விரும்பினால் அவரை நான் திருமணம் முடித்துகொள்வதற்கு தயாராகவே இருக்கின்றேன் என்று நக்கலாகப் பேசியுள்ளார்.
"கும்பிட்டேன் போய் விடுங்கள்" என்று கெஞ்சிய பொலிஸ் அதிகாரி !
28 August, 2013 by admin
ராவன சக்தி என்னும் சிங்கள அமைப்பு, நேற்றைய தினம் நவிப்பிள்ளை இலங்கையை விட்டு வெளியேறவேண்டும் என்றுகோரி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தடையை தாண்டி ஐ.நா அலுவலகத்துக்குள் பிரவேசிக்க முற்பட்டவேளை அங்கே நின்ற பொலிசார் அவர்களை தடுத்தார்கள். ஆனால் ஒரு உயர் பொலிஸ் அதிகாரி பொலிசாரை அப்படியே நிற்கச் சொல்லிவிட்டு, ஓடிவந்து ராவன சக்தி அமைப்பின் தேரர் ஒருவரைப் பார்த்து கும்பிட்டார். ஐயா தயவுசெய்து இங்கே பிரச்சனை எதுவும் செய்யாமல் சென்றுவிடுங்கள் என்று கெஞ்சி மன்றாடினர்.
இதனைப் பார்த்து ஏனையவர்கள் சிரித்தார்கள். ஆனால் அவரோ அதனை சற்றும் பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. நவிப்பிள்ளையை நாம் தூற்றினால் அது நமக்கு தான் அவமானம். எனவே பிரச்சனைப் படுத்தாமல் செல்லுங்கள் என்று மன்றாடியே அவர்களை அங்கிருந்து கலையவைத்தார் இந்த பொலிஸ் அதிகாரி.
Geen opmerkingen:
Een reactie posten