அவுஸ்திரேலியாவின் எதிர்க்கட்சித் தலைவர் டோனி அபொட், அகதிகள் படகுகளை தடுப்பதற்கு புதிய உத்தியொன்றைக் கையாள திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தோனேசியாவிலுள்ள மீன்பிடி படகுகள் மனிதக் கடத்தல்காரர்களின் கைகளுக்கு போகாமல் அவற்றை தாமே விலைகொடுத்து வாங்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் அபொட் கூறுகிறார்.
சட்டவிரோத குடியேற்றவாசிகளை அவுஸ்திரேலியா நோக்கி கடத்திவர பயன்படுத்தப்படும் படகுகளை பலகோடி டொலர்கள் கொடுத்து விலைக்கு வாங்குவது தான் திட்டமென தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தை ஆளும் தொழிற்கட்சி கேலி செய்துள்ளது.
அடுத்த மாதம் நடக்கவுள்ள பொதுத்தேர்தலில் தஞ்சக் கோரிக்கையாளர்கள் விவகாரம் முக்கிய பிரசாரப் பொருளாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRXMVgp2.html#sthash.LR6LSqFp.dpuf
Geen opmerkingen:
Een reactie posten