தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 25 augustus 2013

வட மாகாணசபையில் போர்க் குற்றச் செயல்கள் குறித்து விசாரணை நடத்த ஆணைக்குழு!

சமுர்த்திக் கடன் வழங்குவதாகக்கூறி மருதநகர் பிரதேச மக்களை வரவழைத்து ஏமாற்றிய ஈ.பி.டி.பி பா.உறுப்பினர்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 ஓகஸ்ட் 2013, 09:03.50 AM GMT ]
சமுர்த்தி வங்கி மூலம் கடன் வழங்க இருப்பதாக மருதநகர் கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்களது ஆதரவாளர்கள் எனக் கருதப்படுவோரால் அறிவித்தல் விடுக்கப்பட்டதுடன் நேற்றைய தினம் மருத நகர் ஐயனார் கோவில் பகுதியில் ஒன்று கூடுமாறும் கேட்கப்பட்டது.
இவ் அறிவித்தலை உண்மை என்று நம்பிய அக் கிராமத்து மக்கள் கடுமையான வெயிலில் அலைந்து அக்கூட்டத்திற்கு சமூகமளித்தனர்.
சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக அம்மக்களைக் காக்க வைத்த நிலையில் அங்கு தமது குழாமுடன் வந்திறங்கிய பா.உ சந்திரகுமார், அங்கு தேர்தல் பரப்புரைக் கூட்டத்தினை நடாத்திச் சென்றுள்ளார்.
அரச செயலகங்களில் பணி புரியும் அலுவலர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடக் கூடாது என்ற வரைமுறையினை மீறி அரச மற்றும் சமுர்த்தி ஊழியர்கள் நேற்றைய தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்குபற்றி பரப்புரை நிகழ்வில் ஈடுபட்டிருந்தனர்.
தமது ஏழ்மை நிலையினைப் பயன்படுத்தி பொய்யான அறிவித்தலை விடுத்து வேகாத வெயிலில் தம்மை அலைய வைத்து ஏமாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் மீதும் அவரது குழாம் மீதும் தமது விசனத்தையும் கோபத்தையும் மருதநகர் மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
 http://www.tamilwin.net/show-RUmryIRZMVfo3.html#sthash.NCFD2Dx0.dpuf

வட மாகாணசபையில் போர்க் குற்றச் செயல்கள் குறித்து விசாரணை நடத்த ஆணைக்குழு!
[ ஞாயிற்றுக்கிழமை, 25 ஓகஸ்ட் 2013, 02:39.07 AM GMT ]
வட மாகாணசபையில் போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்த ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட உள்ளதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
வட மாகாணசபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியதன் பின்னர் இவ்வாறு, ஆணைக்குழுவொன்று நிறுப்பட உள்ளது.
போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்துவதற்காக வட மாகாணசபையின் கீழ் இந்த ஆணைக்குழு நிறுவப்படும்.
இதன் அறிக்கை எதிர்வரும் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது சமர்ப்பிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யும் தமது கட்சியின் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இந்தப் போராட்டத்திற்கு எதிராக எவராலும் தடை ஏற்படுத்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRZMVgw3.html#sthash.3l9Vf2er.dpuf

Geen opmerkingen:

Een reactie posten