வட மாகாணசபை தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் வவுனியா மாவட்டத்தில் இல 08ல் போட்டியிடும் எம்.எம்.ரதன் கனகராயன்குளத்தில் பல பகுதிகளில் பிரச்சார களமுனையில் கடந்த சில தினங்களாக தீவிரமாக ஈடுபட்டார்
பல்கலைக்கழக மற்றும் மாணவர்கள் ஆதரவாளர்கள் சகிதம் பிரச்சார களமுனையில் நேரடியாக நின்று மக்களை தமிழ் தேசிய உணர்வில் தட்டியெழுப்பியதோடு வீட்டுச் சின்னத்திற்கு வாக்களிக்குமாறும் குறிப்பிட்டார்





கொல்லர் புளியங்குளம் மன்னகுளம் புற்குளம் பெரியகுளம் கனகராயன்குளம் ஆகிய பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது மக்களும் அவரிடம் கற்றுக் கொண்ட மாணவர்களும் உற்சாகமாக வரவேற்றனர்
தமிழ் பேசும் மக்களின் உண்மைக்குரலாய் திகழும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிப்பதோடு உண்மையான தமிழ் தேசிய வாதிகளை வெல்லவைப்போம் எனவும் அங்குள்ள மக்கள் உறுதிபட தெரிவித்தனர்
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRXMVgq0.html#sthash.1BEj9zU5.dpuf
Geen opmerkingen:
Een reactie posten