தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 23 augustus 2013

இலங்கையில் வெளிநாட்டு சக்திகள் தலைதூக்க இடமளிக்க போவதில்லை: இராவணா பலய

ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு உபத்திரவம் செய்ய வேண்டாம்: சத்தியராஜ்
[ வெள்ளிக்கிழமை, 23 ஓகஸ்ட் 2013, 07:00.38 AM GMT ]
ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரவம் செய்யமால் இருந்தால் போதும் என நடிகர் சத்தியராஜ் கேட்டுக்கொண்டார்.
சென்னை சத்தியம் திரையரங்கில் ஆர்யா, நயன்தாரா நடித்துள்ள ராஜா ராணி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மெட்ராஸ் கபே படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. அதில் ஈழ விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்தி இருப்பதாக கேள்விபட்டேன்.  விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தாமல் இருந்தால் போதும்.
ஒருவேளை உண்மையாகவே ஈழ விடுதலைப்போராட்டத்தை கொச்சைப்படுத்தியிருந்தால் அது மிகப் பெரிய தவறு. உதவி செய்ய வேண்டாம். உபத்திரவம் செய்யாமல் இருந்தால் போதும் என்றார்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRXMVhx3.html#sthash.rZpmFwup.dpuf

இலங்கையில் வெளிநாட்டு சக்திகள் தலைதூக்க இடமளிக்க போவதில்லை: இராவணா பலய
[ வெள்ளிக்கிழமை, 23 ஓகஸ்ட் 2013, 06:19.56 AM GMT ]
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கை பயணத்திற்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கைகளை ஈடுபட தயாராகி வருவதாக இராவணா பலய அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கை போன்று வளர்ச்சியடைந்து வருகின்ற நாட்டு எதிராக நடவடிக்கைகளை எடுத்து வரும் நவநீதம்பிள்ளை, இலங்கையை காலில் மிதிக்க முயன்று வருகிறார் என அந்த அமைப்பின் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நவநீதம்பிள்ளை புலம்பெயர் நாடுளில் இருக்கும் புலிகளுக்கு சார்பாக செயற்படும் பெண்மணி.
அமெரிக்காவுடன் சம்பந்தப்பட்ட உலகில் பல நாடுகளில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வருகையை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம்.
வெளிநாட்டு சக்திகள் இலங்கையில் தலைதூக்க இடமளிக்க போவதில்லை என்றார்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRXMVhx2.html#sthash.lrTbNKSP.dpuf

Geen opmerkingen:

Een reactie posten