தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 27 augustus 2013

முள்ளிவாய்க்காலுக்கு நவநீதம்பிள்ளை விஜயம்

வெலிவேரிய சம்பவம்! அரச நிறுவனமொன்றிடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விளக்கம்
[ செவ்வாய்க்கிழமை, 27 ஓகஸ்ட் 2013, 02:26.53 PM GMT ]
வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பான கூட்டத்தில் கலந்து கொள்ளத்தவறிய அரச நிறுவனமொன்றிடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விளக்கம் கோரியுள்ளது.
சில ஊடகப் பிரதிநிதிகளிடம் உரையாற்றிய மனித உரிமைகள் ஆணைக்குழு, குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோரி வெலிவேரிய ரத்துபஸ்வெல பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறை தொடர்பாக கலந்துரையாட 26 அரச நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும், அக்கலந்துரையாடலில் ஒரு அரச நிறுவனம் மாத்திரம் கலந்து கொள்ளவில்லை. அதற்கு விளக்கமளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இன்றைய கூட்டத்தில், வெலிவேரிய மோதல் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRbMVeo7.html#sthash.2TDgP2OC.dpuf

முள்ளிவாய்க்காலுக்கு நவநீதம்பிள்ளை விஜயம்
[ செவ்வாய்க்கிழமை, 27 ஓகஸ்ட் 2013, 12:55.47 PM GMT ]
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை முல்லைத்தீவில் இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்ற பகுதிகளுக்கு இன்று மாலை விஜயம் செய்துள்ளார்.
அத்துடன், பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதிக்கும் அவர் விஜயம் செய்துள்ளார்.
நேற்று மாலை, யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த நவநீதம்பிள்ளை, யாழ். பொது நுலகம் மற்றும் மாவட்ட அலுவலகத்திற்கு விஜயம் செய்து அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் மற்றும் வடமாகாண ஆளுநர் சந்திரசிறி ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளார்.
இன்று காலை, யாழ்ப்பாணத்தில் ஐ.நா உயரதிகாரிகளுடன், மனித உரிமைகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார். அத்துடன், நவி. பிள்ளை சமூகப் பிரதிநிதிகளுடன் மூடிய அறைக்குள் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRbMVeo6.html#sthash.9aE5YIYJ.dpuf

Geen opmerkingen:

Een reactie posten