தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 22 augustus 2013

அத்துமீறிய சிங்கள குடியேற்றங்கள் இன முரண்பாடுகளை தோற்றுவிக்கும்: பொன். செல்வராசா !

அத்துமீறிய சிங்கள குடியேற்றங்கள் இனங்களுக்கு இடையிரல் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்.
மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்கு எதிரில் நேற்று நடைபெற்ற இந்த அத்துமீறிய குடியேற்றங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு முரணாக இந்த அத்துமீறிய குடியேற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. நீதிமன்ற உத்தரவையும் மீறி மட்டக்களப்பில் சிங்கள குடியேற்றங்கள் சட்டவிரோதமாக ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பில் உள்ள பௌத்த பிக்கு ஒருவரே இதன் பின்னணயில் இருந்து செயற்பட்டு வருகிறார்.
இப்படியான அத்துமீறிய குடியேற்றங்கள் சமூகங்கள் மத்தியில் குழப்பங்களையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தும். இதனால் இவ்வாறான சட்ட விரோத குடியேற்றங்களை அரச அதிகாரிகள் தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும்.
பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவில் கெவிலியாமடு, புழுகனாவ ஆகிய கிராமங்களில் ஏற்கனவே 15 நிரந்தர வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் அரச காணிகளில் அத்துமீறி குடிசைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் மேலும் 21 நிரந்தர வீடுகளை நிர்மாணிப்பதற்கான பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சில அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் பௌத்த பிக்கு முன்நின்றி இந்த செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறார்.
அத்துமீறி அரசாங்க காணிகளை அபகரித்துள்ளவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும். சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள குடிசைகளும், கட்டடங்களும் அகற்றப்பட வேண்டும் என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten