தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 25 augustus 2013

பூந்தமல்லி சிறப்பு முகாமில் உண்ணாவிரதமிருந்த 3 ஈழத்தமிழர்கள் திடீர் கைது

தமிழகத்தில் பூந்தமல்லி சிறப்பு முகாமில் உண்ணாவிரத போராட்டம் நடத்திய இலங்கை அகதிகள் மூன்று பேரை பொலிசார் இன்று அதிகாலை திடீரென கைது செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பூந்தமல்லி கரையான் சாவடியில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் இலங்கையை சேர்ந்த சந்திரகுமார், கிருஷ்ணமூர்த்தி, மகேஷ்வரன் உள்ளிட்ட 8 பேர் கடந்த ஓராண்டாக அகதிகளாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சிறப்பு முகாமில் இருந்த செந்தூரான் திறந்த வெளி முகாமிற்கு மாற்றப்பட்டார். இதை தொடர்ந்து அகதிகள் சந்திரகுமார், கிருஷ்ணமூர்த்தி, மகேஷ்வரன் ஆகியோர் தங்களை திறந்த வெளிமுகாமிற்கு மாற்ற கோரி கடந்த ஒரு வாரமாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இவர்களிடம் வருவாய்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உண்ணாவிரதத்தை கைவிட அவர்கள் மறுத்து விட்டனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் சிறப்பு முகாமிற்கு வந்த பூந்தமல்லி  பொலிசார் உண்ணாவிரதம் இருந்த 3 அகதிகளையும் அதிரடியாக கைது செய்தனர்.
பூந்தமல்லி அமர்வு நீதிமன்ற நீதிபதி வேல்ராஜ் முன்னிலையில் சந்திரகுமார், கிருஷ்ணமூர்த்தி, மகேஷ்வரன் ஆகியோரை ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். கைதானவர்கள் மீது தற்கொலைக்கு முயன்றதாக பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
http://www.tamilwin.net/show-RUmryIRZMVfp7.html#sthash.ufn3ffEI.dpuf

Geen opmerkingen:

Een reactie posten