தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 21 augustus 2013

லண்டன் தமிழ் இளைஞர்களுக்கு எதிராக சர்வதேச பிடிவிராந்து பிறப்பிக்க கடும் முயற்சி !

இலங்கையில் வேறு நபர்களின் ஏ.டி.எம். அட்டைகளை பயன்படுத்தி சுமார் 33 கோடி ரூபாவை மோசடி செய்ததாக கூறப்படும், மோகன்ராஜ் என்ற லோகேஸ்வரன் மணிமாறனை கைதுசெய்ய சர்வதேச காவற்துறையினரும் மான்செஸ்டர் சர்வதேச காவற்துறையினரும் தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருவதாக புலனாய்வு பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (19) அறிவித்தனர். பிரித்தானிய காடிஃப் மைதானத்திற்குள் நுழைந்து, இலங்கை கிரிக்கெட் அணிக்கு இடையூறுகளை ஏற்படுத்திய இந்த நபரை கைதுசெய்வதற்காக சர்வதேச சிகப்பு பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது. மைதானத்திற்குள் ஓடிய நபர்களில் ஒருவர், இலங்கையில் பண மோசடியில் ஈடுபட்டவர் என்கிறது இலங்கை.

கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில் சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்காக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக புலனாய்வு பிரிவினர் கொழும்பு நீதவான் கியான் பிலப்பிட்டியவிற்கு நேற்று அறிவித்தனர். அத்துடன் இந்த பாரிய நிதி மோசடியுடன் தொடர்புடைய இரண்டாவது சந்தேக நபரான பாலசுப்ரமணியம் உதயதாஸ் பிரித்தானிய பிரஜை எனவும் அவருக்கு இலங்கையில் நிரந்தர முகவரிகள் எதுவும் இல்லை எனவும், அவருக்கு பிணை வழங்கப்பட்டால் அவரை நீதிமன்றத்தை புறக்கணிப்பார் என்பதால் சந்தேக நபரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறும் புலனாய்வு பிரிவினர் கேட்டுக்கொண்டனர்.

இதனடிப்படையில் முதலாவது சந்தேக நபரான ரூபன் குலதீபன், இரண்டாவது சந்தேக நபரான பாலசுப்ரமணியம் உதயதாஸ் ஆகியோரை எதிர்வரும் செப்டம்பர் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நேற்று உத்தரவிட்டார். ரூபன் மற்றும் உதயதாஸ் ஆகியோர் இலங்கைச் சிறையில் உள்ளார்கள். இவர்களுக்கும் காடிஃப் மைதானத்தில் ஓடிய மணிமாறனுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பது குறித்து பொலிசார் இதுவரை தகவல் எதனையும் வெளியிடவில்லை.



Geen opmerkingen:

Een reactie posten