தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 23 augustus 2013

ஈழத்தமிழர்களின் இன அழிப்பை யேர்மன் மக்களிடம் எடுத்துக்கூறும் முகமாக நடைபெற்ற சந்திப்புகள்!

ஷிராணி பதவி நீக்கம் தொடர்பான அறிக்கை பொதுநலாய நாடுகளின் செயலாளரின் கையில்!
[ வெள்ளிக்கிழமை, 23 ஓகஸ்ட் 2013, 09:30.33 AM GMT ]
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாநாயக்க பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பிலான அறிக்கைகளையும் அபிப்பிராயங்களை பொதுநலவாய நாடுகளின் செயலாளர் கமலேஷ் சர்மா பெற்று கொண்டுள்ளார்.
பொதுநலவாய அமைப்பின் செயலகத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த ஆவணங்கள் கிடைக்கபெற்றதாக பொதுநலவாய அமைப்பின் தகவல் மற்றும் பொது விவகார செயலகததின் பணிப்பாளர் ரிச்சர்ட் உக்கு தெரிவித்தார்.
இந்த ஆவணங்கள் முக்கியமான அரசியல் சூழ்நிலைகளில் போது, உதவுவதற்கான பயனுள்ள தீர்மானங்களை எடுக்க பொதுநலவாய அமைப்பின் செயலகத்திற்கு உதவும் எனவும் அவர் கூறினார்.

அத்துடன் அமைப்பின் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த ஆவணங்கள் பாதுகாப்பாக பேணப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
 http://www.tamilwin.net/show-RUmryIRXMVgoz.html#sthash.O9EB0kBt.dpuf

ஈழத்தமிழர்களின் இன அழிப்பை யேர்மன் மக்களிடம் எடுத்துக்கூறும் முகமாக நடைபெற்ற சந்திப்புகள்
[ வெள்ளிக்கிழமை, 23 ஓகஸ்ட் 2013, 11:15.25 AM GMT ]
பெர்லின் நகரத்தில் ஈழத்தமிழர்களின் இன அழிப்பை வலியுறுத்தி யேர்மன் மக்களிடம் சந்திப்புகள் மேற்கொள்ளப்பட்டது.
யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை பிரதிநிதிகள் சந்திப்பை மேற்கொண்டு ஈழத்தமிழர்கள் 65 ஆண்டுகளாக சிங்கள பேரினவாத அரசால் இனப் படுகொலை செய்யப்படுகின்ற உண்மையை பதிவு செய்தனர்.
உலகின் மிகவும் பழமை வாய்ந்த இனமாக தமிழர்களும் அவர்கள் மொழியாகிய தமிழும் இன்று திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுவதையும், தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமாக வலியுறுத்தப்பட வேண்டிய முக்கியத்துவத்தையும், ஈழ தமிழ் மக்களின் வரலாற்றையும் மற்றும் போராட்ட வரலாற்றையும் விளக்கியதோடு, 21ஆம் நூற்றாண்டில் மிகவும் கொடூரமான இன அழிப்பு அடைந்த மக்கள், தமது உரிமைகளை எந்த நிலையிலும் விட்டுகொடுக்க முடியாது என்பதையும் வலியுறுத்தி எடுத்துரைக்கப்பட்டது.
அத்தோடு போர் முடிந்து 4 வருடங்கள் ஆகியும் ஈழத்தமிழர்கள் எவ்வித சுதந்திரம் இன்றி அவர்களின் பாரம்பரிய நிலம் பறிக்கப்பட்டு ,அரச பின்னணியில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் தமிழர் பூமியில் அதிகரித்து வருவதையும் சுட்‌டிக்காட்டினர்.
அத்தோடு “146 679 தமிழ் மக்களுக்கு என்ன நடந்தது?” எனும் புகைப்படக் கண்காட்சியும் வைக்கப்பட்டதாக இந்நிகழ்வுகளை ஏற்பாடு செய்த யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.net/show-RUmryIRXMVgo3.html#sthash.pKj22mNk.dpuf

Geen opmerkingen:

Een reactie posten