வடக்கில் இடம்பெறுகின்ற வன்முறைகளுக்கு இராணுவத்தினரே காரணம்!- தமிழ் கூட்டமைப்பு - இராணுவ தலையீடு இருக்காது!- தேர்தல் ஆணையாளர்
[ வியாழக்கிழமை, 22 ஓகஸ்ட் 2013, 12:00.09 AM GMT ]
யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஐயம் செய்த தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தொடர்பில் வேட்பாளர்களின் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாழ் பொது நூலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த கலந்துரையாடலின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிறேமச் சந்திரன் தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தல் நிலைமைகள் மற்றும் பிரச்சனைகள் தொடர்பாக தேர்தல்கள் ஆணையாளருக்கு தெரியப்படுத்தியிருக்கின்றோம் தேர்தல் காலத்தில் செய்யவேண்டிய விடயங்கள் குறித்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆணையாளருக்கு எடுத்துக் கூறியுள்ளது.
இராணுவம் இங்கு இருக்கின்ற வரையில் சிவில் நிலைமைகளை ஏற்படுத்த முடியாது இங்கு நடைபெறும் வன்முறைச் சம்பவங்களுக்கு இராணுவத்தினரே காரணம் என்று நாங்கள் தெரிவித்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.
வலி வடக்கிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் வாக்களிப்பதற்கு வசதியாக போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படுவதுடன், தற்காலிக அடையாள அட்டை வழங்கும் திகதியை கால நீடிப்புச் செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளளோம். அத்துடன் தீவுப்பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்கு அப்பகுதி பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளோம்.
அத்துடன் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் போராட்டங்கள் நடத்த முடியாது என தேர்தல்கள் திணைக்களம் அறிவித்திருக்கின்ற நிலையில் யாழ் நகரில் இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது இவ்வாறு போராட்டங்கள் நடாத்தலாமா? ஏன்று நாங்கள் கேள்வி எழுப்பிய கேள்விக்கு தேர்தல் ஆணையாளர் பதிலளிக்கவில்லை என்று சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்தார்.
இங்கு நடைபெறுகின்ற பிரச்சனைகளுக்கு பிரதான காரண கர்த்தவாக இராணுவம் உள்ளது இங்கிருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டுமென தொடர்ச்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தி வருகிறது இது தேர்தல் காலம் என்பதால் இராணுவத்தினர் இவ்வாறான செயற்பாடுகள் நீதியானதும் சுதந்தரமானதுமான தேர்தலாக நடத்த முடியாது என்று சுட்டிக்காட்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஐனாதிபதிக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் கடிதம் எழுதுமாறு தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச் சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றதன் பின்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் சீ.விக்னேஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பின் ஈ.சரவணபவன், ஐக்கிய தேசியக் கட்சியின் முதன்மை வேட்பாளர் தியாகராஜா துவாரகேஸ்வரன் ஆகியோரும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
வடக்கு தேர்தலில் இராணுவ தலையீடு இருக்காது: மகிந்த தேசப்பிரிய
இதன்போது தேர்தலை நீதியானதும் நேர்மையானதுமாக நடத்துவதற்கே நாம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம் என்பதுடன் வடமாகாண சபைத் தேர்தலில் இராணுவத்தின் தலையீடு இருக்காது என்று தேர்தலகள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
யாழ் பொது நூலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் தொடர்பிலான சந்திப்பை அடுத்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பில் அரச அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள், கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமனற உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளோம். இத் தேர்தலில் அரச அதிகாரிகளின் பங்களிப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்றும் அலுவலர்களுக்;கான பயிற்சி வழங்கியுள்ளளோம்.
இந்தச் சந்திப்பில் வாக்களிப்பதற்கான தற்காலிக அடையாள அட்டை விநியோகம் எதிர்வரும் 3 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது. இதற்கான காலத்தை நீடிக்குமாறு வேட்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் தற்காலிக அடையாள அட்டை விநியோகம் 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தேர்தல் தொடர்பில் யாழ் மாவட்டத்தில் சண்டிலிப்பாய், நெடுந்தீவு, பருத்தித்துறை, வேலணை, சாவகச்சேரி ஆகிய 5 பிரதேச செயலர் பிரிவில் முறைப்பாட்டுப் பிரிவொன்று ஆரம்பிக்கவுள்ளதாகவும் இதன் மூலம் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் இந்த அலுவலகத்திலோ அல்லது தேர்தல் திணைக்களம் மற்றும் பொலிஸ் நிலையம் என்பவற்றிலோ எழுத்து மூலம் சமர்ப்பிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
நாவந்துறைப் பகுதியில் தேர்தல் திணைக்கள அதிகாரிகள் இராணுவத்தால் மிரட்டப்பட்டுள்ளனர் என்பது தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில,
அவ்வாறான சம்பவம் எதுவும் இடம்பெறவில்லை தேர்தல் விடயத்தில் இராணுவத்தினரின் தலையீடு இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த தேர்தல் வன்முறை தொடர்பில் எவ்விதமான முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை என்றும் யாழில் நெடுந்தீவுப் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊடகங்கள் மூலம் அறியப்பட்டதாகவும் நேற்று முன்தினம் கூட்டமைப்பின் வேட்பாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கொழும்பு சென்று அது பற்றி ஆராயப்படும் என்று அவர் தெரிவித்தார்.
நவநீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்யும்போது அமெரிக்க பிரச்சினை தீரும்!- ஜகத் ஜயசூரிய
[ வியாழக்கிழமை, 22 ஓகஸ்ட் 2013, 12:20.18 AM GMT ]
மனித உரிமைகள் பிரச்சினை காரணமாக அமெரிக்க தரப்பினர் கொண்டிருக்கின்ற நிலைப்பாடும் எங்களின் நிலைப்பாடும் வெவ்வேறாக இருப்பது தான் இதற்கு காரணம்.
இம்முறை ஐநாவின் மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு வந்தால் அந்தப் பிரச்சனை தீரும் என்று நினைக்கின்றேன் என்றார் ஜகத் ஜயசூரிய.
நவிபிள்ளையும் நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று பார்ப்பார். உண்மை நிலைமையை வெளிப்படுத்த வேண்டியது அவரது கடமை.
அவர் கொழும்பில் தங்கியிருக்கமாட்டார். நாட்டின் பல பகுதிகளுக்கும் செல்வார். யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு பகுதிகளுக்கும் செல்வார் என்றார் ஜெனரல் ஜயசூரிய.
இலங்கையின் இறுதிப் போரின்போது வன்னியில் படை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கை இராணுவத்தின் 53ம் பிரிவு, 57-ம் பிரிவு மற்றும் தற்போது ஐநாவில் இலங்கையின் பிரதிநிதியாக இருக்கின்ற மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் 58ம் பிரிவு உள்ளிட்ட பல படையணிகள் மீது சர்வதேச அமைப்புகள் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்மை குறிப்பிடத்தக்கது.
அந்தக் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மறுத்து வருகிறது.
மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ், மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க ஆகியோர் அமெரிக்காவின் இராணுவ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விண்ணப்பித்திருந்தனர். எனினும் அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Geen opmerkingen:
Een reactie posten