தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 31 augustus 2013

கருணாதிநிதி தமிழர்களுக்கு துரோகம் இழைத்து விட்டார்: தமிழக முதல்வர் - துரோகம் இழைக்கும் காங்கிரஸ் அரசை எதிர்த்து இளைஞர்கள் போராட வேண்டும்: வைகோ !



இலங்கை தமிழர் பிரச்சினை உட்பட தமிழர்களினதும் தமிழ் நாட்டினதும் பிரச்சினைகளில் திமுக தலைவர் கருணாதிநிதி துரோகம் இழைத்து விட்டதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றம் சுமத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தன்னலத்திற்காக, “காவிரி நதிநீர்ப் பங்கீடு”, “கச்சதீவு தாரைவார்ப்பு”, “இலங்கைத் தமிழர் பிரச்சினை”, “சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு” என பல்வேறு பிரச்சினைகளில் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் துரோகம் இழைத்தவர் தி.மு.க. தலைவர்.
கருணாநிதி, தமிழக மக்களின் எதிர்ப்பையும் தாண்டி, தமிழ்நாட்டின் உரிமையைப் பறிக்கக் கூடிய, தமிழகத்திற்கு நிதிச் சுமையை தரக் கூடிய தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதாவிற்கு ஆதரவாக தி.மு.க. மக்களவை உறுப்பினர்களை வாக்களிக்கச் செய்து துரோகம் இழைத்துள்ளதைப் பார்க்கும் போது, “எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?” என்ற பழமொழியைத் தான் நினைக்கத் தோன்றுகிறது.
இலங்கைத் தமிழர் பிரச்சினை, பொருளாதாரக் கொள்கை, தமிழக மீனவர்கள் பிரச்சினை, கச்சதீவு பிரச்சினை, காவிரிப் பிரச்சினை, முல்லைப்பெரியாறு பிரச்சினை என அனைத்திலும் தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராகவே செயல்படும் மத்திய காங்கிரஸ் கட்சிக்கு வெண் சாமரம் வீசிக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.
சொல்வா ரடீ! கிளியே! வாய்ச் சொல்லில் வீரரடி!’’ என்ற மகாகவி பாரதியாரின் பாடல் வரிகள் தான் நினைவிற்கு வருகின்றன.
கருணாநிதியின் இரட்டை வேடத்திற்கும், தமிழர்களுக்கும் தமிழகத்திற்கும் எதிரான நடவடிக்கைகளுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்பதில் ஐயமில்லை என்று தெரிவித்துள்ளார்.
துரோகம் இழைக்கும் காங்கிரஸ் அரசை எதிர்த்து இளைஞர்கள் போராட வேண்டும்: வைகோ
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் துரோகம் இழைக்கும் காங்கிரஸ் அரசை எதிர்த்து இளைஞர்கள் போராட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் இதனை கூறியுள்ளார்.
ஐ.நா.வின் மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத இலங்கை அமைச்சர்கள் மேர்வின் சில்வா, விமல் வீரவன்ஸ ஆகியோர் நவநீதம்பிள்ளையை இழிவுபடுத்திப் பேசியுள்ளனர். தமிழர்களுக்கான நீதியை நிரந்தரமாகக் குழிதோண்டிப் புதைக்கவே ராஜபக்ஷ கூட்டம் திட்டமிட்டு இவ்வாறு பேசி வருகின்றனர். இது கண்டிக்கத்தக்கது.
ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் தொடர்பாக மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை துணிச்சலாக அறிக்கை கொடுத்ததனால்தான் இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலை ஓரளவுக்கு உலகுக்குத் தெரியவந்தது.
ஆனால், இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷவை பொதுநலவாய அமைப்பின் தலைவராக்க காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு வரிந்து கட்டி வேலை செய்து வருகிறது. இந்தத் துரோகத்தை எதிர்த்து இளைஞர் சமுதாயம் போராட வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIQVMWmo7.html#sthash.FKo8KfwS.dpuf

Geen opmerkingen:

Een reactie posten