தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 27 augustus 2013

மட்டக்களப்புக்கு பிரித்தானிய தூதரக அதிகாரிகள் விஜயம்

கிழக்கு மாகாண சபையில் குழப்பம்
[ செவ்வாய்க்கிழமை, 27 ஓகஸ்ட் 2013, 12:24.25 PM GMT ]
கிழக்கு மாகாண சபையில் இன்று குழப்பநிலை ஏற்பட்டதால் சபை நடவடிக்கைகள் 10 நிமிடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு மாகாண சபையின் இன்றைய அமர்வினைப் பார்வையிடுவதற்கு வட மாகாண அமைச்சின் செயலாளர்கள் வருகை தந்திருந்தனர். இதனையடுத்தே இங்கு குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
இன்று காலை கிழக்கு மாகாணசபைத் தவிசாளர் ஆரியவதி கலப்பதி தலைமையில் சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகின.
இவ்வமர்வை வடமாகாண அமைச்சின் செயலாளர்கள் மற்றும் உயரதிகாரிகள் குழுவினர் சபையில் அமர்ந்து பார்வையிட்டனர்.
இதனையடுத்து, கிழக்கு மாகாணசபையின் ஆளும் தரப்பு உறுப்பினர் ஜெயந்த விஜயசேகர,  குறித்த அதிகாரிகள் சபையினுள் அமர்த்தப்பட்டிருப்பது, சபையின் சட்டத்திற்கு முரணானது எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, சபை நடவடிக்கைகள் 10 நிமிடத்திற் குஒத்தி வைக்கப்பட்டது.
அதன் பின்னர், வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சபை நடவடிக்கைகளை பார்வையார்கள் கலரியிலிருந்தே பார்வையிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRbMVeo5.html#sthash.1RYouMSg.dpuf

மட்டக்களப்புக்கு பிரித்தானிய தூதரக அதிகாரிகள் விஜயம்
[ செவ்வாய்க்கிழமை, 27 ஓகஸ்ட் 2013, 12:02.00 PM GMT ]
இலங்கையில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டுக்கு வருகை தரும் பிரதிநிதிகள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் குழு வொன்று மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
இது தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக இன்று இலங்கையிலுள்ள பிரித்தானிய தூதுவரலாயத்தின் உயரதிகாரிகள் குழுவொன்று விஜயம் செய்தது.
கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதுவராலயத்தின் அரசியல் பிரிவுக்கான தலைமை அதிகாரி டயனியல் பீட்டர் மற்றும் அரசியல் பிரிவு அதிகாரி மஹிந்திரா ரட்ணவீர ஆகியோர் மட்டக்களப்புக்கு விஜயம் செய்தனர்.
இவர்கள் மட்டக்களப்பு மாநகர சபைக்கு சென்று, மாநகர சபை ஆணையாளர் கே.சிவநாதனை சந்தித்ததுடன், மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பின் தலைவர் எஸ்.மாமங்கராஜா மற்றும் வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளன தலைவர் வி.இரஞ்சித மூர்த்தி, வர்த்தக சங்க தலைவர் எம்.செல்வராஜா ஆகியோரை சந்தித்துள்ளனர்.
மேலும், மட்டக்களப்பு நகரிலுள்ள ஜாமியுஸ்ஸலா ஜும் ஆ பள்ளிவாயலுக்கு சென்று, பள்ளிவாயல் நிருவாகத்தினரை சந்தித்து கலந்துரையாடினர்.
பொதுநலவாய மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டு இராஜ தந்திரிகள் மட்டக்களப்புக்கு விஜயம் செய்து மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ், முஸ்லிம் சமூகமட்டத் தலைவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகள், அரசாங்க அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாக பிரித்தானிய தூதவராலயத்தின் அரசியல் பிரிவு அதிகாரி மஹிந்திரா ரட்ணவீர தெரிவித்தார்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRbMVeo4.html#sthash.WhTaCIwC.dpuf

Geen opmerkingen:

Een reactie posten