தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 27 augustus 2013

நவி பிள்ளை பின்கதவால் தப்பி ஓட்டம் (வீடியோ இணைப்பு) !


இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்க்கை நிலையை நேரில் கண்டறிவதற்காக வந்துள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை இன்று(27) யாழ் பொதுநூலகத்திற்கு வந்த போது அங்கு பெரும் சோக நிலையை எதிர் கொண்டார். நவநீதம்பிள்ளைக்கு, யுத்தத்தின் பின் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி நிலமைகளை விளக்குவதற்காக வடமாகாண ஆளுனரால், யாழ் பொது நூலகத்தில் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந் நிலையில் இப் பகுதிக்கு கூடிய காணாமல் போனவர்களின் உறவுகள் தமது நிலையை நவநீதம் பிள்ளைக்கு தெரிவிப்பதற்காக கூடியிருந்தனர். 

இருந்தும் கருத்தரங்கு முடிந்ததும் இவர்களை சந்திக்காது நூலகத்தின் பின்பகுதியால் வெளியேறியுள்ளார் நவநீதம்பிள்ளை. இவ்விடையம் தமிழர்களை பெரிதும் பாதித்துள்ளது. காணமல் போன உறவுகள், ஒன்றுகூடி தமது பிரச்சனைகளை சொல்ல முற்பட்டவேளை, அங்கே சில சிங்களவர்களைப் புகுத்திய இலங்கை புலனாய்வுப் பிரிவினர், அவர்கள் கைகளில் புலிகளுக்கு எதிரான பதாதைகளை பிடிக்கச் சொல்லியுள்ளார்கள். தமிழ் உடை அணிந்துவந்த இச் சிங்களப் பெண்கள், புலிகள் செய்த போர் குற்றங்களை விசாரிக்கவேண்டும் என்று பதாதைகளை தாங்கி நின்றார்கள். கூட்டத்தோடு கூட்டமாக இவர்கள் கலந்து நின்றதை காணக்கூடியதாக இருந்ததாக அதிர்வின் புலனாய்வு நிருபர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகத் தான் நவிப்பிள்ளை பின் பக்க கதவால் சென்றாரா தெரியவில்லை என்றும் பேசப்படுகிறது.

எது எவ்வாறு இருப்பினும், யாழில் உள்ள சிங்கள மக்களை வைத்து இலங்கை புலனாய்வுப் பிரிவினர் நல்ல நாடகங்களை அரங்கேற்றிவருகின்றனர் என்பது மட்டும் தெளிவாகப் புரிகிறது. 



Geen opmerkingen:

Een reactie posten