தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 22 augustus 2013

மதங்கள் தொடர்பான சட்டம் நல்லிணக்கத்தை பாதிக்கும்!- மாற்றுக்கொள்கைகளுக்கான நிறுவனம்

பிரதான மதங்களின் இழிவு மற்றும் அனுபவங்கள் தொடர்பாக பௌத்த சாசன அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை குறித்து மாற்றுக்கொள்கைகளுக்கான நிறுவனம் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் பிரதான மதங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
எனினும் பௌத்த சாசன அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை ஏனைய மதங்களின் சுதந்திரத்தை பாதிக்கும் முதல் படியாக இருக்கும் என்று அச்சத்தை மாற்றுக்கொள்கைக்கான நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த புதிய சட்டத்தின் மூலம் இலங்கையில் எதிர்பார்க்கப்படுகின்ற இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் என்பவற்றுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று மாற்றுக்கொள்கைக்கான நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் இந்த புதிய சட்டம் அரசியல் அமைப்பின் 10வது அமைப்பி;ல் உள்ள மதம் சம்பந்தமான சுதந்திர போக்கை பாதிப்பதாகவும் நிறுவனம் குற்றம் சுமத்தியுள்ளது.
எனவே நாடாளுமன்றத்தில் இந்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்படும் போது அதனை நாடாளுமன்றம் நிராகரிக்கவேண்டும் என்றும் மாற்றுக்கொள்கைக்கான நிறுவனம் கோரியுள்ளது.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRWMVhr1.html#sthash.JtIacLVc.dpuf

Geen opmerkingen:

Een reactie posten