தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 23 augustus 2013

த.தே.கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு எதிரான வன்முறைகள்: தேர்தல் ஆணையாளருக்கு சிறீதரன் எம்.பி கடிதம்!

இலங்கையின் அபிவிருத்தி பலன்கள் சீனாவுக்கே செல்கிறது: ஐ.தே.க
[ வெள்ளிக்கிழமை, 23 ஓகஸ்ட் 2013, 08:37.51 AM GMT ]
பெண்களுக்கான சித்திரவதைகள் பாலியல் வன்முறைகள் தற்பொழுது அதிகரித்துள்ளதாகவும் மூதாட்டிகள் கூட வீதியில் செல்லவோ, வீட்டில் தனித்திருக்கவோ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தனி பண்டார தெரிவித்தார்.
கொழும்பு ராஜகிரிய தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பெண்களுக்கு எதிரான இந்த வன்முறை குற்றச் செயல்களில் 90 வீதமான குற்றச் செயல்கள் மகிந்த சிந்தனையின் பிரதேச சபை உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர்.
மேலும் இலங்கையில் பிறக்க போகும் குழந்தையும் 4 லட்சம் ரூபா கடனாளியாக மாறியுள்ளது. அரசாங்கம் கூறும் அபிவிருத்தியின் பலன்கள் சீனாவுக்கே செல்கிறது.
எதிர்காலத்தில் இலங்கை சீனாவின் காலனித்துவ நாடாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அரசாங்கத்தின் தொலைக்காட்சியை பார்க்கும் போது நாட்டில் உள்ள மகிந்த சிந்தனை அபிவிருத்தியை காண கிடைத்தாலும் நாட்டில் உண்மையான அபிவிருத்தியை காணமுடியவில்லை.
அப்படியான அபிவிருத்தி நாட்டில் ஏற்பட்டிருந்தால், அது மக்களின் வாழ்க்கையில் உணரப்பட வேண்டும். நாட்டின் பொருளாதாரம் பலமடைய வேண்டும். ஆனால் நாட்டில் அப்படி எதுவும் நடப்பதை மக்களால் காணமுடியவில்லை என்றார்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRXMVhx5.html#sthash.L55O4UdZ.dpuf

த.தே.கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு எதிரான வன்முறைகள்: தேர்தல் ஆணையாளருக்கு சிறீதரன் எம்.பி கடிதம்
[ வெள்ளிக்கிழமை, 23 ஓகஸ்ட் 2013, 08:57.06 AM GMT ]
யாழ்.மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு எதிரான தேர்தல் வன்முறை குறித்து நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வடமாகாண சபைத் தேர்தல்- 2013: தேர்தல் வன்முறை
இலங்கைத் தமிழரசுக் கட்சி (தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு) சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தீவகத்தில் போட்டியிடும் ஒரேயொரு  வேட்பாளரான விந்தன் கனகரத்தினம்  அவர்களை ஆதரித்து 2013.08.15ம் திகதி வியாழக்கிழமை அவரின் ஆதரவாளர்கள் துண்டுப்பிரசுரங்களை நெடுந்தீவின் பகுதிகளில் விநியோகித்தபோது அன்றைய தினம் மதியம் ஈ.பி.டி.பியினைச் சேர்ந்த சுதன், மோகனதாஸ் என்பவர்கள் அப்பிரசுரங்களைப் பறித்துக் கிழித்து  எறிந்திருக்கிறார்கள். அத்துடன் பிரசுரம் விநியோகித்த எங்கள் கட்சி ஆதரவாளர்களை மிரட்டியுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக அன்றைய தினமே இரவு 9.15 மணியளவில் நெடுந்தீவு ஒற்றைப்பனையடிப் பகுதிக்கு நெடுந்தீவுப் பிரதேச சபைக்குச் சொந்தமான சிவப்பு நிற NP 253 – 5112ம் இலக்கப் பிக்கப் வாகனத்தில் வந்த பிரதேச சபைத் தலைவர் ரஜீப், ஈ.பி.டி.பியின் அங்கத்தவர்களான சுதன், மோகனதாஸ் எட்வேர்ட்ராஜ்ரஞ்சன் (இவர் நெடுந்தீவு குறிகாட்டுவான் கடற்பயணத்தின் நோயாளர் காவு வண்டியான ஹியூமெடிக்கா வள்ளத்தின் ஓட்டுனராவார்), நெடுந்தீவுப் போக்குவரத்துச் சபை பேரூந்துச் சாரதி சீனத்தி அப்பன் ஆகியோர் இரும்புக்கம்பி, பொல்லுகள் சகிதம் சைமன் ஜேசுதாசன், ஜேசுதாசன் அன்ரனிற்றா, ரணசிங்க ஆரியசேன (ரவி) ஆகியோரை அடித்து உதைத்துத் தாக்கியுள்ளனர். இவர்களில் ரவி (ரணசிங்க ஆரியசேன) என்பவர் கடுங்காயங்களுடன் நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2013.08.17ம் திகதி சனிக்கிழமை நானும் வேட்பாளர் விந்தன் கனகரத்தினம் அவர்களும் நேரடியாக நெடுந்தீவு சென்று வைத்தியசாலையிலுள்ள ரவி (ரணசிங்க ஆரியசேன) அவர்களையும் ஒற்றைப்பனையடியில் தாக்கப்பட்ட மக்களையும் நேரடியாகச் சென்று பார்வையிட்டு முழு விபரங்களையும் கேட்டறிந்து கொண்டோம். ஈ.பி.டி.பியின் அராஜகப் பிடிக்குள் தாங்கள் சிக்கித் தவிப்பதாக அந்த மக்கள் கண்ணீர் மல்க என்னிடம் தெரிவித்தார்கள். 
அத்துடன் எழுத்து மூலமாக நாற்பது (40) கையொப்பங்களையிட்டுக் கடிதமும் என்னிடம் கையளித்துள்ளார்கள். அதன் பிரதியையும் இத்துடன் தங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். இத்தேர்தல் தீவுப் பகுதியில் நேர்மையாக நடக்க வேண்டுமானால் பலமான சர்வதேசத் தரம் வாய்ந்த கண்காணிப்பு நடவடிக்கை மிக அவசியமானது என்பதையும் தங்களுக்கு வலியுறுத்துகின்றேன். தாங்கள் விரைந்து நடவடிக்கை எடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் இக்கடிதத்தைச் சமர்ப்பிக்கின்றேன்.
நன்றி.
சி.சிறீதரன்,
பாராளுமன்ற உறுப்பினர்,
இலங்கைத் தமிழரசுக் கட்சி,
யாழ்ப்பாண மாவட்டம்.
பிரதிகள்:
1.பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் – வட மாகாணம், யாழ்ப்பாணம்.
2.தெரிவத்தாட்சி அலுவலர் / அரசாங்க அதிபர், யாழ்ப்பாணம்.
3.பணிப்பாளர் – சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (CaFFE)
4.பணிப்பாளர் - சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாடு (PAFFREL)
5.பணிப்பாளர் – மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்(CPA )
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRXMVhx6.html#sthash.4lluuMAb.dpuf

Geen opmerkingen:

Een reactie posten