தம்புள்ள கண்டலம சந்தியில் அமைந்துள்ள காளி கோயிலின் பிரதான சிலையை, பௌத்த பிக்குகள் எடுத்துச் செல்ல முயற்சித்துள்ளனர்.
தம்புள்ள உயன்வத்த ரஜமஹா விஹாரையில் காணப்படும் விஸ்ணு தேவாலயத்தில் பிரதிஷ்டை செய்ய முயற்சித்துள்ளனர்.
இதன் போது ஆலய பூசகரும் இந்து பக்தர்களும் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இதனால் குறித்த பிரதேசத்தில் இன்று பகல் பதற்ற நிலைமை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பௌத்த பிக்குகள் ஊர்வலமாகச் சென்று குறித்த சிலையை எடுத்துச் செல்ல முயற்சித்துள்ளனர்.
ஒரு மணித்தியாலம் இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
குறித்த கோயிலை வேறும் இடத்தில் அமைப்பதற்கு 5ம் திகதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கோயிலையும் சிலையையும் அகற்றப் போவதில்லை என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, பாராளுமன்ற உறுப்பினர் ராதாகிருஸ்ணனிடம் வாக்குறுதி அளித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten