தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 31 augustus 2013

முல். பெரியகுளம் ஆலயத்திற்கு பொங்கலுக்காகச் சென்ற தமிழர்கள் மீது சிங்கள காடையர்கள் அடாவடி!



முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பெரியகுளம் கிராமத்தில் கடந்த 1984ம் ஆண்டின் பின்னர் மக்கள் முழுமையாக மீள்குடியேற்ற அனுமதிக்கப்படாத நிலையில் அப் பகுதியிலுள்ள ஆலயத்திற்கு பொங்கலுக்காகச் சென்ற தமிழ் மக்கள் சிங்கள காடையர்கள் சிலரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
பெரியகுளம் கிராமத்தில் உள்ள பிள்ளையார் ஆலயத்திற்கு தமிழ் மக்கள் சிலர் நேற்று பொங்கலுக்காகச் சென்று பொங்கியுள்ளனர்.
இந்நிலையில் அங்கு 3 மோட்டார் சைக்கிள்களில் மதுபோதையில் வந்த சிங்கள காடையர்கள் சிலர், அங்கிருந்த பெண்களுடன் சேஷ்டை விட்டதுடன், ஆலயத்தின் மூலஸ்தானத்திற்குள் நுழையவும் முற்பட்டுள்ளனர்.
எனினும் மக்கள் அதற்கு அனுமதிக்காத நிலையில் வீதியில் நின்ற நாய் ஒன்றைப் பிடித்து வந்து கடவுளுக்கு பொங்கிக் கொண்டிருந்த பொங்கலை முதலில் அந்த நாய்க்கு கொடுக்க வேண்டும் என சண்டையிட்டுள்ளனர்.
அத்துடன், ஆலயத்திலிருந்த வீபூதி, சந்தனம், குங்குமம் போன்றவற்றை எடுத்து நிலத்தில் சிந்தியதுடன், அந்த நாய்க்கும் பூசி அட்டகாசம் புரிந்துள்ளதுடன், சமய நம்பிக்கைகளை ஏளனம் செய்யும் வகையில் அரைகுறை தமிழில் பேசியும் உள்ளனர்.
இவ்வாறு அட்டகாசம் புரிந்து கொண்டிருக்கையில் அப்பகுதியால் சில தமிழ் இளைஞர்கள் வந்ததை அவதானித்த அவர்கள், அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கும் நிலையில், எல்லைக் கிராமங்களில் தமிழர் நிலங்களில் வந்து குடியேறியிருக்கும் சிங்களவர்கள் அந்த நிலத்திற்குச் சொந்தமான மக்கள் தங்கள் நிலத்திற்குத் திரும்புவதற்கு மட்டுமல்லாமல் மக்கள் தங்கள் நம்பிக்கைகளை தொடர்வதற்கும் தடைவிதித்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIQVMWmq7.html#sthash.Vh3qwbmv.dpuf

Geen opmerkingen:

Een reactie posten