தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 24 augustus 2013

உறுதிமொழியை மீறுகிறது மத்திய அரசு!- ஈழத்தமிழர்கள் நாடுகடத்தல் விவகாரம்! நாடுகடத்த இடைக்காலத் தடை!

செல்போனைக் கைப்பற்றினார்கள்! சிம் அட்டை எங்கே? - நளினி வழக்கறிஞர் கேள்வி
[ சனிக்கிழமை, 24 ஓகஸ்ட் 2013, 03:25.01 AM GMT ] [ விகடன் ]
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைச் சம்பவத்தில் சிறையில் இருக்கும் நளினியின் செல்போன் வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது!
வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நளினியிடம் இருந்து 2010 ஏப்ரல் மாதம் 20-ம் திகதி செல்போனை பறிமுதல் செய்ததாகவும் அரசுப் பணியாளர்களைப் பணிசெய்யவிடாமல் தடுத்ததாகவும் சிறைக் கண்காணிப்பாளர் இராஜலட்சுமி புகார் அளித்தார்.
இந்தவழக்கில், வேலூர் நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 6-ம் திகதி ஆஜர்படுத்தபட்டார் நளினி. அப்போது, ''20 வருடங்களுக்கு மேலாக நான் சிறையில் இருக்கிறேன். என்னை யார் யார் பார்க்க வருகிறார்கள் என்பது பொலிஸுக்குத் தெரியும்.
அவர்களை மீறி எப்படி செல்போன் என்னிடம் வரும்? பொய்வழக்குப் போட்டிருக்கிறார்கள். வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் விசாரிக்க வேண்டாம். கோர்ட்டில் வந்து பேசுகிறேன்'' என்று உணர்ச்சிவசப்பட்டார்.
கடந்த 19-ம் திகதி மீண்டும் ஆஜரானார். நளினியிடம் இருந்து செல்போன் கைப்பற்றிய போது பணியில் இருந்த சிறைக் கண்காணிப்பாளர் இராஜலட்சுமி உட்பட 11 பேரிடம் நீதிபதி விசாரித்தார்.
சிறையில் செல்போன் கண்டெடுக்கப்பட்ட இடத்தை 23-ம் திகதி பார்ப்பதாகக் கூறி, விசார ணையை ஆகஸ்ட் 30-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி, ''இது முழுக்க முழுக்க பொய்யான குற்றச்சாட்டு. காவல்துறை சார்பில் அளிக்கப்பட்ட வரைபடத்தில் சிறையில் நளினியிடம் இருந்து செல்போன் கண்டெடுக்கப்பட்ட இடத்தைக் காட்டியுள்ளனர்.
அந்த இடத்தை நாங்கள் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்றோம். அதற்கு நீதிபதி, சட்டத்தில் அதற்கு அனுமதி இல்லை. ஆனால் நீதிபதி மூலமாகப் பரிசோதிக்கலாம் என்றார்.
சிறை அதிகாரிகளிடம் விசாரணை முடிந்த பிறகு எங்களது வாதத்தைத் தொடர்வோம். செல்போனை பறித்தவர்கள் அதன் சிம்  அட்டை பற்றி ஏன் கூறவில்லை? என்றார்.
செல்போன் இருந்தது நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டு தண்டனை வழங்கப்படும். இதனால், நன்னடத்தை காரணமாக நளினி விடுதலையாவது சிரமம்தான்.
செல்போன் வழக்கின் தீர்ப்பு 30-ம் திகதி வருகிறது. அதுவரை காத்திருப்போம்!
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRYMVgsy.html#sthash.22XEXQC4.dpuf


உறுதிமொழியை மீறுகிறது மத்திய அரசு!- ஈழத்தமிழர்கள் நாடுகடத்தல் விவகாரம்! நாடுகடத்த இடைக்காலத் தடை!
[ சனிக்கிழமை, 24 ஓகஸ்ட் 2013, 03:40.52 AM GMT ] [ விகடன் ]
கொழும்பில் நவம்பர் மாதம் நடக்கும் கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று சொல்லப்பட்டுவரும் வேளையில், மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அழைப்பு விடுத்துச் செல்கிறார் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்.
அதேநேரம், ஈழப் போராட்டத்தை இழிவுபடுத்துவதாக உள்ள 'மெட்ராஸ் கஃபே’ திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி தமிழர்கள் போராடி வருகிறார்கள்.
இதற்கிடையில், சத்தமே இல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள ஈழநேரு, செந்தூரன், சௌந்தரராஜன் ஆகிய மூன்று ஈழத்தமிழ் அகதிகளை நாடு கடத்துமாறு உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு.
நாடு கடத்தும் விவகாரம் குறித்து திருச்சி சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழநேருவிடம் பேசினோம்.
நான் தமிழ்நாட்டுக்கு வந்து 24 வருசமாகுது. 2009 யுத்தத்துக்குப் பிறகுதான் கியூ பிராஞ்சின் கெடுபிடி முன்பைவிட அதிகமாச்சு.
இப்படி கெடுபிடிகள் அதிகமாக இருக்கும் நேரத்துல, புதுச்சேரி முகாமில் ஒரு சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டாள். அந்தப் பிரச்சினையில் நான் தலையிட்டு வழக்குப் பதியச் சொன்னேன்.
அப்போ கியூ பிராஞ்ச்காரங்க, 'நீங்கள்லாம் யோக்கியமா?’ என்று தேவையற்ற வார்த்தைகளை விட்டபிறகு, முகாம் மக்களோடு சேர்ந்து நானும் சாலை மறியலில் உட்கார்ந்தேன்.
அதன் பிறகுதான் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அப்போதுமுதல் கியூ பிராஞ்ச் என்னை ஏதேனும் பிரச்னையில் சிக்க வைப்பதில் குறியாக இருந்தனர்.
அப்படிப்பட்ட சமயத்தில் 2012 ஜூலை 1-ம் தேதி, புழல் அகதி முகாமில் ஆறு இளைஞர்கள் முகமறியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டனர். அதைக் கண்டித்து மறுநாள் எனது தலைமையில் போராட்டம் நடந்தது.
அனைத்து மீடியாக்களிலும் இந்தச் செய்தி வெளியானது. இதையடுத்து, 'நாங்கதான் கைது செய்தோம்’ என்று கியூ பிராஞ்ச் பொலிஸார் கூறினர்.
மாலை 8 மணிக்கு நான்கு பேரை விடுதலை செய்துவிட்டு, இரண்டு பேரை மட்டும் சிறையில் அடைத்தனர்.
அதேபோல்தான் காரணம் சொல்லப்படாமலேயே 2012 ஜூலை 13-ல் நானும் கைது செய்யப்பட்டேன்.
பிறகு, வெளிநாட்டுக்கு ஆள் அனுப்புவதாக பணமோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
அந்த வழக்கில் இருந்து பிணையில் வெளியே வந்ததுமே, வெளிநாட்டு தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்து செங்கல்பட்டு சிறப்பு முகாமில் வைத்தனர். கைதுசெய்த க்யூ பிராஞ்ச் அதிகாரிகளிடம் கேட்டதுக்கு, இது மேலிடத்து ஆர்டர்’ என்று பொதுவாகச் சொல்லிவிட்டனர்.
போன மாசம் 18-ம் தேதி செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இருந்து, திருச்சி மத்திய சிறை வளாகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சிறப்பு முகாமில் என்னை அடைத்துவிட்டனர். என் மேல போட்ட வழக்கை ஒரு வருஷமா இழுத்தடிக்கிறாங்க.
ஆனா, இன்னும் ஒரு சாட்சியைக்கூட முழுசா விசாரிக்கல. 18 பேர் இருந்த செங்கல்பட்டு சிறப்பு முகாம்ல, இப்ப 53 பேர் இருக்காங்க. சிறப்பு முகாம்ல அடைக்கறது சாதாரணமா போச்சு.
நான் நாடு கடத்தப்பட்டால் என்னைப் போலவே சிறப்பு முகாம்கள்ல இருக்கிறவங்களையும் ஏதாவது காரணம் சொல்லி நாடு கடத்துற நிலை ஏற்பட்டு விடும்'' என்று வேதனையைக் கொட்டினார்.
நாடுகடத்தல் முடிவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ள வழக்கறிஞர் சங்கரசுப்புவிடம் பேசினோம்.
1994-ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த வழக்கில், 'இலங்கைத் தமிழர்களை விருப்பத்துக்கு மாறாக நாடு கடத்த மாட்டோம்’ என்று மத்திய அரசு உறுதிமொழி கொடுத்துள்ளது.
அப்படியிருக்கும்போது மூன்று ஈழத் தமிழர்களை நாடு கடத்த மத்திய அரசு உத்தரவிட்டு இருப்பது, அந்த உறுதிமொழிக்கு எதிரானது என்றார்.
ஈழநேருவை கைதுசெய்த கியூ பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் சிட்டிபாபுவிடம் பேசினோம்.
அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்வதாக பணத்தை ஏமாற்றியதாக இலங்கைத் தமிழர்கள் புகார் கொடுத்ததன் அடிப்படையில்தான் அவர் கைது செய்யப்பட்டார் என்று சொன்னவர், நமது மற்ற கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் நழுவினார்.
சர்வதேச மனித உரிமைகள் அறிவிப்புப்படி, எந்த நாட்டைச் சேர்ந்த எந்த ஒரு மனிதனும், தன் நாட்டில் உள்ள அரசியல் சூழலாலும் மத இனக் கலவர சூழலாலும், உயிர் வாழ்வதே அங்கு பிரச்சினை என்று கருதினால், அவன் இடம்பெயர்ந்து எந்த நாட்டிலும் வாழ்வதற்கு உரிமை இருக்கிறது.
அப்படி உயிர் வாழ்வதற்குத்தான் ஈழத் தமிழர்களும் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
உயிர்களின் விலையில்லா தன்மையை எப்போதுதான் இந்திய அரசாங்கம் புரிந்து கொள்ளுமோ?
இலங்கைத் தமிழரை நாடு கடத்த உயர்நீதிமன்றம் இடைக்கால தடை
இலங்கைத் தமிழரை, நாடு கடத்த எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை 27ம் தேதிக்கு தள்ளிவைத்து அதுவரை தற்போதைய நிலை தொடர இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
சென்னைஇ பம்மல் நகரைச் சேர்ந்த செந்தூரான் என்பவர் தாக்கல் செய்த மனு:
நான் இலங்கைத் தமிழர். என் தந்தை கொழும்பில் நகை கடை வைத்திருந்தார். இலங்கையில் நடந்த இனப் பிரச்சினையால் 2011ல் அகதியாக இந்தியா வந்தேன்.
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தங்கினேன். பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, கேரளா எர்ணாகுளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டேன்;
பின் ஜாமினில் வந்தேன். அதைத் தொடர்ந்து செங்கல்பட்டு முகாமில் அடைக்கப்பட்டேன்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பூந்தமல்லி முகாமுக்கு மாற்றப்பட்டேன். மீண்டும் செங்கல்பட்டுக்கு மாற்றக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டேன்.
போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். சிறையிலும் உண்ணாவிரத்தில் ஈடுபட்டேன்.

பின் சிவகங்கை மாவட்டம், தாழையூர் முகாமில் தங்கியிருக்க அரசு அனுமதித்தது. தேவகோட்டை தாசில்தார் அனுமதி பெற்று, சென்னையில் உள்ள மனைவி மற்றும் குழந்தையை சந்தித்தேன்.

சென்னையில் வேலை கிடைத்ததால் தாசில்தாரின் அனுமதி பெற்றேன். மாதம் ஒரு முறை அவரிடம் ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.
ஒவ்வொரு மாதமும், போன் மூலம் தாசில்தாரிடம் தகவல் தெரிவிப்பேன். "கியூ' பிரிவு பொலிஸாரும் விசாரணை நடத்துவர்.

இந்நிலையில், என்னையும், வேறு இரண்டு பேரையும் இலங்கைக்கு நாடு கடத்த மத்திய அரசு உத்தரவிடடிருப்பதாக பத்திரிகையில் செய்தி வெளிவந்தது.
 என்னை இலங்கைக்கு நாடு கடத்தக் கூடாது. நாடு கடத்த உத்தரவிட்டிருப்பதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இம்மனு நீதிபதிகள் தனபாலன், சி.டி.செல்வம் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் எஸ்.துரைசாமி, வி.இளங்கோவன் மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வில்சன், தமிழக அரசு சார்பில் அரசு குற்றவியல் வழக்கறிஞர் சண்முக வேலாயுதம் ஆஜராயினர்.
இந்தியாவுக்குள் மனுதாரர் நுழைந்ததே சட்ட விரோதமானது, அவர் முகாமில் தங்கவில்லை, மாநில அரசு அளித்த அறிக்கையின்படி, மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
மனுதாரரின் நடவடிக்கைகள் தொந்தரவு விளைவிப்பதாக உள்ளது என மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வில்சன் கூறினார்.

மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.துரைசாமி "தாசில்தார் அனுமதி பெற்று தான் வேலைக்கு செல்கிறார். கியூ பிரிவு  பொலிஸார் விசாரணை நடத்துகின்றனர். அவரை நாடு கடத்தக் கூடாது என்றார்.
இதையடுத்து மனு மீதான விசாரணையை இம்மாதம் 27ம் தேதிக்கு தள்ளிவைத்து "அதுவரை தற்போதைய நிலை தொடர வேண்டும்' என "டிவிஷன் பெஞ்ச்' இடைக்கால உத்தரவிட்டது.
http://www.tamilwin.net/show-RUmryIRYMVgsz.html#sthash.UGomeMzk.dpuf

Geen opmerkingen:

Een reactie posten