தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 23 augustus 2013

இலங்கை தொடர்பான நவி.பிள்ளையின் அறிக்கை உலக மக்களின் கண்களைத் திறக்க வேண்டும்: கி.வீரமணி

வெலிவேரியவில் தாக்குதல் பலியானவர்களுக்கு இழப்பீடு
[ வெள்ளிக்கிழமை, 23 ஓகஸ்ட் 2013, 12:16.32 PM GMT ]
வெலிவேரிய ரத்துபஸ்வல பிரதேசத்தில் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் இந்த நிவாரணங்கள் வழங்கப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
சம்பவம் கொல்லப்பட்ட அகில தினேஷ் மற்றும் சமீல ரவிஷான் ஆகிய மாணவர்களின் பெற்றோருக்கு இழப்பீட்டு நிவாரணங்கள் வழங்கப்பட்டன.
நிவாரணங்களை வழங்கி உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, நிவாரணங்கள் வழங்கப்பட்டாலும் இழக்கப்பட்ட உயிர்களுக்கான இழப்பீட்டை ஒருபோதும் மதிப்பிட முடியாது என்று கூறியுள்ளார்.
அத்துடன் சம்பவத்தில் உயிரிழந்த நிலந்த புஷ்பகுமாரவுக்கான இழப்பீட்டு நிவாரணம் அண்மையில் கண்டியில் உள்ள ஜனாதிபதியின் மாளிகையில் அண்மையில் வழங்கப்பட்டது.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRXMVgo7.html#sthash.67XiexJs.dpuf

இலங்கை தொடர்பான நவி.பிள்ளையின் அறிக்கை உலக மக்களின் கண்களைத் திறக்க வேண்டும்: கி.வீரமணி
[ வெள்ளிக்கிழமை, 23 ஓகஸ்ட் 2013, 11:43.30 AM GMT ]
எதிர்வரும் செப்டம்பரில் மனித உரிமைக் குழுக் கூட்டம் நடப்பதற்கு முன்னர், அதன் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்குச் சென்று ஆய்வு நடத்திட உள்ளார். உண்மை நிலைகளைக் கண்டறிந்து, உலக மக்களின் கண்களைத் திறக்கும் வகையில் அவரது அறிக்கை அமைய வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூளியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது,
ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கைத் தீவுக்குச் செல்லவிருக்கிறார்.
அடுத்த மாதம் மனித உரிமைக் குழுக் கூட்டம் கூட இருக்கிறது. அந்தக் கூட்டத்தில் ஈழத் தமிழர்களின் இன்றைய நிலைபற்றி, அறிக்கை ஒன்றினைத் தாக்கல் செய்யும் பொறுப்பு அவருக்கு இருக்கிறது. இந்தநிலையில் அவர் இலங்கைக்குச் செல்லுவது - மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இலங்கைத் தீவின் அரசியல் சமுதாயப் பிரச்சனைகள், ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளை நல்ல அளவு அறிந்தவர் நவநீதம்பிள்ளை. அவரைப் பற்றிய நல்ல அபிப்பிராயம் இலங்கை ஜனாதிபதிக்கு கிடையாது என்றாலும் நவநீதம்பிள்ளை அவற்றையெல்லாம் பொருட்படுத்தக் கூடியவரல்லர்.
(1) இன்றைய நிலையில் ஈழத் தமிழ் மக்களின் சமூக பொருளாதார நிலைகள் எந்த அளவில் உள்ளன, தமிழர்களுக்கான சொந்தமனைகள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனவா, தமிழ்ப் பிள்ளைகளின் கல்வி வாய்ப்பு எந்த அளவுக்கு இருக்கிறது.
2) தமிழர் பகுதிகளில் சிங்களவர்களின் குடியேற்றம் பற்றிய விவரம். தமிழர் பகுதிகளின் பெயர்கள் சிங்களமயமாக்கப்பட்டிருப்பதன் உண்மை நிலைகள்.
3) தமிழர் வாழும் பகுதிகள் இராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலைமை. இராணுவத்தினரால் தமிழர்களுக்குத் தொடரும் அன்றாடத் தொல்லைகள்.
4) ஈழத் தமிழர்களில் இளைஞர்கள் கடத்திக் செல்லப்பட்ட நிலை - அவர்கள் உயிரோடு உள்ளார்களா? இன்னும் சித்திரவதை முகாம்கள் இருக்கின்றனரா? துணைவர்களைப் போரில் பலி கொடுத்த இளம் பெண்களுக்கான மறுவாழ்வுக்கான திட்டங்கள் உண்டா?
4) முள்வேலி முகாம்கள் முற்றாக நீக்கப்பட்டு விட்டனவா?
5) சிறையில் இருக்கும் ஈழத் தமிழர்களின் நிலை என்ன? தமிழக மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனரே அவர்களின் நிலை என்ன?
6) வடக்கு மாநிலத்தில் தேர்தல் நடத்த இருப்பதாகச் சொல்லப்படுகிறதே. அது ஜனநாயக முறையில் நடக்குமா? ஐ.நா. பார்வையாளர் அனுமதிக்கப்படுவாரா? (எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க போன்றவர்களையும்கூட சந்திப்பது அவசியம்)
7) போர் முடிந்த பிறகு இலங்கையில் நடைபெற்ற உரிமை மீறல்களை சர்வதேச மனித உரிமைக் குழு அய்.நா.வில் அறிக்கையாகக் கொடுத்தது (13.3.2012). இதுகுறித்து இன்றைய நிலையில் ஏதாவது மாற்றம் நிகழ்ந்துள்ளதா என்பது அறியப்பட வேண்டும்.
8) ஐ.நா. நியமித்த மூவர் குழு அளித்த அறிக்கையில் (13.4.2011) சுட்டிக் காட்டப்பட்டுள்ள குறைபாடுகள் எந்த அளவு களையப்பட்டுள்ளன?
9) குறைந்தபட்சம் இலங்கை அரசு தங்களுக்கு தாங்களே அழைத்துக் கொண்ட எல்.எல்.ஆர்.சி. (கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு) அளித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்பதையும் ஆராய வேண்டும்.
10) இந்தியா வழங்கிய நிதி உதவியின் பலன்கள் முறையாகப் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்குப் போய்ச் சேர்ந்துள்ளனவா?
11) போரின் போது நடத்தப்பட்ட அத்துமீறல்கள் என்னென்ன? உண்மையில் எத்தனை ஆயிரம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்?
12) ஈழத் தமிழர்களைப் பல வகைகளிலும் துன்புறுத்திய பெண்களைப் பாலியல் வேட்டையாடிய சிங்களவர்கள்மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா?
13) ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்க எந்தெந்த நாட்டு இராணுவம் துணை புரிந்தது?
14) இலங்கை இராணுவத்தின் போர்க் குற்றங்கள் எந்தெந்த வகைகளில் இருந்தன?
15) ஈழத் தமிழர்களின் எதிர்காலம் நம்பிக்கைக்கு உரிய வகையில் இருக்க வாய்ப்பு உண்டா?
16) பொதுவாக பொது மக்களின் அபிப்ராயம் - ஊடகங்களின் போக்கு எப்படி இருக்கிறது. ஈழத் தமிழர்களைப் பொறுத்த வரையில் அவர்கள் மத்தியில் எது தீர்வு என்று கருதுகின்றனர் என்று பல வகைகளிலும் ஆய்வு செய்து மனித உரிமை ஆணையாளர் என்ற முறையில் நவநீதம்பிள்ளை அவர்கள் கொடுக்கும் அறிக்கை உலக நாடுகளின் கண்களைத் திறக்கச் செய்வதாக அமைய வேண்டும் என்று எதிர் பார்க்கிறோம்.
இலங்கை அரசு நவநீதம்பிள்ளை அவர்களுக்கு எந்த அளவுக்கு ஒத்துழைப்புக் கொடுக்கப் போகிறது என்பது கேள்விக்குறிதான் என்றாலும், அதையும் கடந்து அவர்தன் கடமையைச் சிறப்பாகச் செய்வார் என்றே நாம் மட்டுமல்ல - உலக நாடுகள் அனைத்தும் எதிர்பார்க்கின்றன என தெரிவித்துள்ளார்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRXMVgo5.html#sthash.266cJyDb.dpuf

Geen opmerkingen:

Een reactie posten