தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 24 augustus 2013

எமது மக்கள் தமது வாக்குப் பலத்தினை அரசியல் அபிலாசைகளுக்காக பயன்படுத்த வேண்டும்! கே.என். விந்தன்

வடக்குத் தேர்தலில் மக்களைக் குழப்பும் நடவடிக்கையில் இராணுவத்தினர்- யாழில் ஆசிரியர் நியமனம் குறித்து விசாரணை நடத்துமாறு த.தே.கூட்டமைப்பு முறைப்பாடு
[ சனிக்கிழமை, 24 ஓகஸ்ட் 2013, 12:00.28 PM GMT ]
ஜனநாயக நாடுகளில் தேர்தல் பணிகளுக்கும், இராணுவத்திற்கும் எவ்வித தொடர்புகளும் இருக்க முடியாது. ஆனால் இலங்கையில் விசேடமாக வடக்கு மாகாணத்தில் அரசாங்கத்திற்கான தேர்தல் பணிகள் அனைத்தையும் இராணுவமே மேற்கொண்டு வருகின்றமை மாகாணத்தில் இராணுவ ஆட்சி நடத்தப்படுவதை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.
ஆனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பொய் சொல்வதாக அரசாங்கமும், அரசாங்க கட்சிகளின் வேட்பாளர்களும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அது பொய்யாகவே தெரியும். ஏனென்றால் இராணுவம் அவர்களுக்காகத்தானே வேலை செய்கின்றது. எனவே எத்தகைய விமர்சனங்கள் வரினும் உண்மையை நாங்கள் சொல்லுவோம்.
மேற்கண்டவாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் உத்தியோகபூர்வ பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.
குறித்த சந்திப்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இராணுவத்தினரால் சிவில் பாதுகாப்பு படையில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு தபால் மூல வாக்களிப்பு வசதிகளை செய்து கொடுத்து அவர்களுடைய வாக்களிக்கும் உரிமையினை நசுக்க நினைத்தது.
எனினும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அந்த விடயத்தில் அதிக கவனம் செலுத்தியிருந்த நிலையில் அந்த முயற்சிகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டது.
ஆனால் இப்போது மேற்படி இரு மாவட்டங்களிலும் உள்ள சிவில் பாதுகாப்பு படை ஊழியர்கள் அவர்களது கிராமங்களிலேயே வாக்களிக்க வசதி ஏற்படுத்தி கொடுக்குமாறு, தேர்தல்கள் ஆணையாளரை வலியுறுத்தி கோரும் வகையிலான ஒரு கடிதத்தினை அனுப்புவதற்கு அவர்களிடம் இராணுவம் கையெழுத்துப் பெறுவதாக அறிகின்றோம்.
இதுவும் மக்களை நிர்ப்பந்தித்து அரசாங்கத்திற்கு வாக்களிக்கச் செய்வதற்கேயாகும். இதேபோன்று கல்வித் திணைக்களம் நடத்தவேண்டிய, முன்பள்ளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளை கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவம் நடத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றது.
அண்மையில் யாழ். நாவாந்துறை பகுதியில் இராணுவம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு ஒன்றில் அரசாங்க கட்சி ஒன்றின் வேட்பாளர் கலந்து கொண்டிருக்கின்றார்.  அவர் கலந்து கொண்டதற்கு ஆதாரமாக மறுநாள் பத்திரிகைகளில் அவரதும், இராணுவத்தினதும் புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. ஆனால் அவ்வாறு கலந்து கொள்ளவில்லை என்றே முதலில் மறுக்கப்பட்டது.
எனவே தேர்தலில் வாக்களிப்பு வீதத்தைக் குறைப்பதற்கும், கள்ளவோட்டு போடுவதற்கும், செல்லாத வோட்டுக்களை போடுவதற்கும், அசராங்க வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்வதற்கும், மக்களைக் குழப்புவதற்கும் அரசாங்கமும், இராணுவமும் தமது முழுமையான நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கின்றனர்.
எனவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பொய் கூறுகின்றது என்பதற்கு மேல் உண்மையில் என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பதை மக்கள் நன்றாக அறிவார்கள்.
இதேபோன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெயரைப் பாவித்து சுயேட்சைகுழு ஒன்று தேர்தல் பிரசாரப் பணிகளை வடக்கு மாகாணம் முழுவதும் மேற்கொண்டு வருகின்றது. நாம் தேர்தல் திணைக்களத்திற்கு எழுத்து மூலம் கடிதம் ஒன்றை சமர்ப்பித்திருக்கின்றோம். எனவே எமது கட்சியின் பெயரைப் பயன்படுத்த முடியாது.
எனவே இது தொடர்பில் தேர்தல் திணைக்களம் உரிய கவனம் எடுக்கவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழில் ஆசிரியர் நியமனக்கடிதங்கள் குறித்து விசாரணை நடத்துமாறு த.தே.கூட்டமைப்பு முறைப்பாடு
வடக்கு மாகாணசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், யாழ்.கல்வித்திணைக்களத்தில் 60 தொடக்கம் 70 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வட, மாகாணத் தேர்தல் ஆணையாளருக்கு முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது.
விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்.கல்வித் திணைக்களத்தில் மாலை 2 மணிக்கு ஆளுநர் தலைமையில் மாகாண கல்வியமைச்சின் செயலாளர் மற்றும் அதிகாரிகளுக்கான கூட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. இதன் பின்னர் 3 மணியளவில் 60 தொடக்கம் 70 வரையான ஆசியர் வகுப்பு 3 தரம் 2 ற்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தகவல் தொழில்நுட்பம், ஆங்கிலம், உடற்கல்வி ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர் நியமனங்களே வழங்கப்பட்டுள்ளன.
எனவே இந்த விடயத்தை உடனடியாக விசாரணை செய்து வழங்கப்பட்ட நியமனங்களை ரத்துச் செய்யுமாறும், தேர்தல் விதி களை மீறும் இச்செயற்பாட்டிற்குச், சட்டரீதியான நடவடிக்கை எடுக்குமாறும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வடக்கு மாகாண தேர்தல் ஆணையாளரின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRYMVgu5.html#sthash.6njNNpb2.dpuf

எமது மக்கள் தமது வாக்குப் பலத்தினை அரசியல் அபிலாசைகளுக்காக பயன்படுத்த வேண்டும்! கே.என். விந்தன்
[ சனிக்கிழமை, 24 ஓகஸ்ட் 2013, 12:26.20 PM GMT ]
எமது மக்கள் தேர்தல்கள் வாயிலாகவே தமது அபிலாசைகளை வெளிப்படுத்த வேண்டியுள்ள நிலையில்இவடமாகாணசபைத் தேர்தலையும் சரியாகப் பயன்படுத்த வேண்டியுள்ளதாக யாழ். மாநகரசபை உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளருமான கே.என்.விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார்.
வேலணையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
எமது மக்கள் தமது உரிமைகளுக்காக அகிம்சை வழியில் போராடினார்கள். அதன்பின்னர் ஆயுதவழியில் போராடினார்கள்.
இப்போராட்டங்களில் அகிம்சை வழியிலான போராட்டங்கள் சகலதும் ஏற்றுக்கொள்ளப்படாமல் அரச வன்முறை கொண்டு அடக்கப்பட்டதன் விளைவாக ஆயுதமேந்தி போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
அப்படியாக இனத்தின் அரசியல் உரிமைகளுக்கான ஆயுத வழிப் போராட்டமும் ஈவிரக்கமின்றி அழிக்கப்பட்டுள்ளது.
லட்சக்கணக்கான தமிழ் மக்கள் நீதி நியாயங்களுக்குப் புறம்பாக கொன்றழிக்கப்பட்டு ஏதிலிகளாக்கப்பட்டுள்ளனர்.
இப்படியானதோர் சந்தர்ப்பத்தில் நாம் மீள்வதற்குத் துடிக்கின்றோம். அவ்வாறாக மீள்வதற்கான சந்தர்ப்பங்களைத் தேடுகின்றோம்.
இவ்வாறு தேடுகையில் எமது அரசியல் பலம் என்று இன்று ஒவ்வொரு தமிழனின் கைகளிலும் ஓர் வாக்குப் பலம் இருக்கின்றது.
இந்த வாக்குப் பலத்தினைக் கொண்டு ஜனநாயக வழியில் போராடுவதற்கு நாம் விட்டுக்கொடுப்புகளுக்கு இடமின்றி செயற்பட வேண்டியுள்ளது.
இன்றைய நிலையில் நீங்கள் அளிக்கும் வாக்குகள் ஒவ்வொன்றும் மிகப் பெறுமதியுடையனவாக இருக்கின்றது.
நீங்கள் கேட்கலாம் நீங்கள் போடும் புள்ளடியின் பெறுமதி என்னவென. இந்த இடத்தில் தமிழ் மக்களின் அபிலாசைகளை எடுத்துரைப்பதற்கான கருத்து வெளியிடும் சுதந்திரமாகவே உங்கள் வாக்குகள் உள்ளன.
நீங்கள் அரசாங்கத்தினாலும் அவர்களாலும் முடுக்கி விடப்பட்டுள்ள பிரசார மாயைகளுக்குள்ளும் உத்திகளுக்குள்ளும் சிக்குவீர்கள் ஆயின், நீங்கள் அளிக்கப்போகும் வாக்குகள் தமிழரின் கதையினை முடிப்பதற்கான ஆயுதங்களாகவே இருக்கும்.
அரசாங்கமாக இருந்தால் என்ன ஏனைய சிங்களவர்களால் தலைமை தாங்கப்படும் கட்சிகளாக இருந்தால் என்ன அவர்கள் தமிழர்களுக்கென்று எந்தப் பிரச்சினையும் இல்லை என முள்ளிவாய்க்காலுடன் அடித்துக் கூறிவிட்டனர்.
இப்படியானதோர் நிலையில் நீங்கள் அரசாங்கத்திற்கு வாக்களித்தால் அது தமிழா்களுக்கென்று எந்தப் பிரச்சினையும் இல்லை என அவர்கள் கூறியதனை நீங்களும் ஆமோதிப்பதாக அமையும்.
இவ்வாறானதோர் வரலாற்றுத் துரோகத்திற்கு நீங்கள் துணை போகாதீர்கள்.
தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு உங்கள் வாக்குகளை வழங்குங்கள்.
இதுவே இன்று எமக்கு உரிமைகளைப் பெறுவதற்கு எஞ்சியுள்ள வழியாகும்.
இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார்.
http://www.tamilwin.net/show-RUmryIRYMVgu6.html#sthash.rnQsPFG6.dpuf

Geen opmerkingen:

Een reactie posten