[ சனிக்கிழமை, 24 ஓகஸ்ட் 2013, 10:01.45 AM GMT ]
இராணுவ பொது சேவை படையணியை சேர்ந்த கப்டனான ஏ.எம்.யூ. சமரகோன் என்பவரே இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளார்.
பொலிஸார் குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு பாதிவு செய்துள்ள நிலையில், இராணுவ அதிகாரி ஒருவருக்கு எதிராக முதன் முறையாக இராணுவ நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சிவில் சமூகத்தில் குற்றங்களை செய்யும் இராணுவத்தினருக்கு மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது எனவும் அவர்களை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் எனவும் இராணுவத தளபதி தயா ரத்நாயக்க , இராணுவத்தின் சட்ட ஆலோசனை குழுவிற்கு உத்தரவிட்டுள்ளார்.
அச்சுவேலியில் துவிச்சக்கர வண்டி கொள்ளையிட்ட படைவீரர் கைது
அண்மையில் அச்சுவேலி மக்கள் வங்கிக்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக் கரவண்டி ஒன்று காணாமல் போனது தொடர்பாக குறித்த வங்கியில் வேலை செய்யும் ஊழியர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டினை அடுத்து அச்சுவேலி குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்க்கொண்டதுடன், இராணுவ வீரர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
வங்கிக்கு முன்னாள் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கமராவின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இராணுவவீரர் துவிச்சக்கர வண்டி திருடியது தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக அவரைக் கைது செய்து விசாரித்ததில் செல்வநாயகபுரம் பகுதியில் 2 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக குறித்த வீரருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்திய வேளை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
http://www.tamilwin.net/show-RUmryIRYMVgt7.html#sthash.R6GdksZZ.dpuf
ஈழத்திலிருந்து படைகளை அகற்ற நவி.பிள்ளை ஆணையிட வேண்டும்: பா.ம.க. நிறுவனர் ராமதாசு
[ சனிக்கிழமை, 24 ஓகஸ்ட் 2013, 09:50.56 AM GMT ]
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற போரின் போது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் வீடுகளை இழந்து அகதிகளாக்கப்பட்டனர். போர் முடிவடைந்து 4 ஆண்டுகள் முடிவடைந்து விட்ட நிலையிலும், திட்டமிட்டு இனப் படுகொலையை நடத்திய இனவாத இலங்கை அரசு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பத்தகுந்த வகையில் விசாரணை நடத்தும்படி இலங்கை அரசுக்கு ஆணையம் ஆணையிட்டது.
இந்த விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வதற்காக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நவநீதபிள்ளை நாளை முதல் ஒரு வாரத்திற்கு இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யவிருக்கிறார். நவநீதம் பிள்ளையின் பயணத்தால் தமிழர்களுக்கு ஓரளவாவது விடிவு பிறக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
இலங்கையில் போர் முடிந்து விட்ட போதிலும், தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் ஆறு தமிழர்களுக்கு ஒரு வீரர் வீதம் ராணுவம் குவிக்கப்பட்டிருக்கிறது. ஓவ்வொருவரின் வீட்டு வாசலிலும் இராணுவத்தினர் நிறுத்தப்பட்டிருப்பதால் தமிழர்கள் படும்பாடு சொல்லி மாளாது. பாதுகாப்பு என்ற பெயரில் இராணுவத்தினர் கட்டவிழ்த்துவிடும் அடக்குமுறையால் தமிழர்கள் கடுமையாக பாதிக்கப் பட்டிருக்கின்றனர். மொத்தத்தில் வடக்கு மாநிலத்தில் உள்ள தமிழர்கள் சிறைக்கைதிகளைப் போல வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த மிகக் கொடுமையான மனித உரிமை மீறல் குறித்து நவநீதம் பிள்ளை விசாரணை நடத்துவதுடன், வடக்கு மாநிலத்திலிருந்து ராணுவத்தை வெளியேற்றும்படி இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு ஆணையிட வேண்டும். இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிங்களர்கள் திட்டமிட்டு குடியேற்றப்பட்டு வருவதை நிறுத்தும்படியும் ராஜபக்சவுக்கு ஆணையிட வேண்டும்.
போரின் முடிவில் சரணடைந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவர்கள் சிங்களப்படையினரால் கடந்த 4 ஆண்டுகளாக விசாரணை என்ற பெயரில் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல் சிங்களப் படையினரின் தாக்குதல்களில் கணவர்களை இழந்த 90 ஆயிரம் கைம்பெண்களும் பல்வேறு வகையான துயரங்களை சந்தித்து வருகின்றனர்.
இவர்களை நவநீதம்பிள்ளை சந்தித்து பேசுவதுடன், சிறை வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்களை விடுதலை செய்யும்படியும், கைம்பெண்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை அமைத்து தரும்படியும் இலங்கை அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
வடக்கு மாநிலங்களில் வாழும் தமிழர்கள் பல வகையான கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவதும், தமிழ் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவதும் தொடர்கிறது. இதைத் தடுக்கும் வகையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் சர்வதேச மனித உரிமை பார்வையாளர்களை நிறுத்த வேண்டும்.
இலங்கைப் போரின் இறுதி கட்டத்தில் தடை செய்யப்பட்ட கொத்து குண்டுகளும், இரசாயன குண்டுகளும் வீசப்பட்டது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும். இந்த விசாரணைகளை ஒரு வார பயணத்தில் முடிக்க முடியாது என்பதால் இதற்காக சர்வதேச விசாரணைக்குழுவை இலங்கைக்கு அனுப்ப வேண்டும். இதுதவிர, இலங்கையின் பொதுவான மனித உரிமை சூழல், போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வுப் பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் ஆகியவை குறித்தும் விசாரிக்க வேண்டும்.
உலகின் அதிகாரம் படைத்த நாடுகளின் துணையுடன் போர்க்குற்றச்சாற்றுகளில் இருந்து தப்பிக்க இலங்கை அரசு முயன்று வருகிறது. இத்தகைய சூழலில் ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நவநீதம்பிள்ளையால் மட்டுமே நீதி பெற்றுத்தர முடியும் என்று உலகம் முழுக்க உள்ள தமிழர்கள் நம்புகின்றனர்.
எனவே, இலங்கையில் நிலவும் உண்மையான சூழலை உலகிற்கு எடுத்துக் கூறவும், அதற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தரவும் இந்த பயணத்தை நவநீதம்பிள்ளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
http://www.tamilwin.net/show-RUmryIRYMVgt6.html#sthash.PhI5ZIIj.dpuf
Geen opmerkingen:
Een reactie posten