கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களை சிவில் பாதுகாப்புப் பிரிவு (CSD) என்ற இராணுவக் கட்டமைப்புக்குள் கட்டாயமாகச் சேர்க்கப்பட்டு அவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் கிளிநொச்சியில் போட்டியிடும் கீதாஞ்சலிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும்,
வாக்குச் சீட்டுக்களில் உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் இருக்கும். எனவே நீங்கள் கீதாஞ்சலிக்குப் போடத் தவறினால் இராணுவப் புலனாய்வுத் துறை உங்களைக் கண்டுபிடித்து விசாரிப்பார்கள் என்று சிவில் பாதுகாப்புப் பிரிவுக்குத் தற்போது பொறுப்பாக இராணுவத்தால் நியமிக்கப்பட்ட இளங்கோ என்பவர் மிரட்டியுள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 600 முன்பள்ளி ஆசிரியர்களும் தலா ஒருவர் 30 பேர் வீதம் தெரிவு செய்து, மொத்தம் 18000 பேரை தேர்தலில் கீதாஞ்சலிக்கு வாக்குப் போட வைக்க வேண்டும்.
இதற்கான பணச் செலவு, போக்குவரத்துச் செலவு எல்லாம் இராணுவம் செய்து தரும் என்று அவர்களுக்குக் கட்டாய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இராணுவம் கிளி நொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் பெரும் விளையாட்டு விழா என்ற பெயரில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளார்கள்.
சகல தேர்தல் செயற்பாடுகளையும் இராணுவமும் அரச தரப்பினரும் கடுமையாக மீறிக் கொண்டிருப்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.
Geen opmerkingen:
Een reactie posten