எந்த விடயத்தையும் முனகூட்டியே கணிக்கவில்லை, விவாதிக்கப்பட வேண்டிய விடயங்கள் பல இருக்கின்றன. சாதகமான அபிவிருத்தி குறித்து பேசப்பட வேண்டியுள்ளது. அதனால் நான் மிகவும் நிறந்த மனதுடனேயே செல்கிறேன். என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
இலங்கை மீது சர்வதேச ரீதியில் போர்ககுற்ற விசாரணைக்கு வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் நவநீதம்பிள்ளை ரொய்ட்டர் செய்தி சேவைக்கு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை முப்பது வருடகால யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் முதன் முறையாக நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை நவநீதம்பிள்ளை உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார்.
இலங்கை வரவுள்ள அவர் 30ம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பதோடு ஜனாதிபதி, எதிர்க்கட்சி தலைவர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளதோடு வட கிழக்கு பகுதிகளுக்கும் விஜயம் செய்யவுள்ளார்.
இலங்கையின் மறுசீரமைப்பு நல்லிணக்க செயற்பாடுகளை நேரில் அறியவேண்டும் எனவும் இலங்கையின் முன்னேற்றம் மற்றும் பொறுப்புக் கூறல் தொடர்பிலும் அறிய வேண்டும் எனவும் ரொய்ட்டர் செய்திச் சேவையுடனான மின்னஞ்சல் உரையாடலில் அவர் தெரிவித்துள்ளார்.
எந்த விடயத்தையும் முன் கூட்டியே கணிக்கவில்லை, விவாதிக்கப்பட வேண்டிய விடயங்கள் பல இருக்கின்றன. சாதகமான அபிவிருத்தி குறித்து பேசப்பட வேண்டியுள்ளது. அதனால் நான் மிகவும் திறந்த மனதுடனேயே செல்கிறேன். அதன் மூலம் எனது சொந்த ஆராய்வில் சீரான மதிப்பீட்டு ஒன்றை மேற்கொள்ள முடிவு செய்துள்ளேன்.
இவ்வாறு நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
ஜாதிக ஹெல உறுமயவுக்கு மரண தேவதையாக தோன்றும் நவிபிள்ளை
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கையை மனித உரிமை சிக்கலில் இருந்து காப்பற்ற வரும் தேவதையாக சிலருக்கு தெரியலாம். எனினும் அவர் நாட்டை தண்டனை மரத்தில் அடிக்க போகும் மரண தேவதையாக தமக்கு தோன்றுவதாக ஜாதிக ஹெல உறுமயவின் மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
மேல் மாகாண அமைச்சருமான அவர் கொழும்பில் நேற்று நடைபெற்ற, நவநீதம்பிள்ளையின் வருகை தொடர்பிலான ஜாதிக ஹெல உறுமயவின் நிலைப்பாட்டை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தனது வழக்கை தானே நடத்தக் கூடாது என்ற சட்ட ரீதியான நெறிமுறையை மீறி ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கையின் மனித உரிமைகள் பற்றி தேட வருகிறார்.
அவரது எதிர்கால அறிக்கைகளுக்கு ஊக்கத்தை கொடுப்பதாக இந்த விஜயத்தின் முடிவுகள் அமையும்.
மனித உரிமைகள் தொடர்பில் இருக்கும் உண்மையான அன்பில் இலங்கையின் மனித உரிமைகள் பற்றி தேடுவதற்காக நவநீதம்பிள்ளை இலங்கை வருகிறார் என்றால், ஆப்கானிஸ்தான், ஈராக் நாடுகளுக்கு சென்று தற்போதும் நடந்து வரும் விடயங்களை முடிந்தால் தேடிப் பார்க்குமாறு அவருக்கு சவால் விடுகின்றோம் என்றார்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRXMVgpy.html#sthash.Se1J4RfW.dpuf
Geen opmerkingen:
Een reactie posten