தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 27 augustus 2013

இந்தியாவை தொடர்ந்தும் அச்சுறுத்தும் நடவடிக்கையில் மகிந்த ராஜபக்ச: பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம்

வடக்கில் சிவில் நிர்வாகம் கிடையாது: விக்ரமபாகு கருணாரட்ன
[ செவ்வாய்க்கிழமை, 27 ஓகஸ்ட் 2013, 06:43.57 AM GMT ]
வடக்கில் சிவில் நிர்வாகம் கிடையாது என புதிய இடதுசாரி கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
வடக்கில் இராணுவ ஆட்சியே நிலவி வருகின்றது. இராணுவ ஆட்சியின் கீழ் தேர்தல் நடத்தப்படுவது குறித்து தேர்தல் ஆணையாளர் கவனம் செலுத்தியுள்ளார்.
தேர்தல் விடயங்களில் இராணுவத்தினர் தலையீடு செய்வது ஜனநாயக விரோதமானது.
வட மாகாணசபைத் தேர்தல் ஜனநாயக விரோத சூழ்நிலையில் முன்னெடுக்கப்படுகின்றது.
ஏனைய இரண்டு மாகாணங்களிலும் ஜனநாயக ரீதியான நிர்வாகக் கட்டமைப்பு காணப்படுகின்றது.
ஆளும் கட்சியினருக்கு இடையில் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.
பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர வேறும் கட்சி உறுப்பினரினால் சுட்டுக் கொல்லப்படவில்லை.
ஆளும் கட்சிக்குள் இடம்பெற்ற மோதலின் காரணமாகவே பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொல்லப்பட்டார்.
அரசாங்கத்தின் பிழைகள் காரணமாகவே சர்வதேச முதலாளித்துவ அமைப்பான ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கையில் விசாரணை நடத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் சர்வதேசம் தலையீடு செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் நிலைமை பற்றி நவனீதம்பிள்ளை கேட்டால் நாட்டில் பாசிச ஆட்சி நடத்தப்படுவதாக குறிப்பிடுவேன் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRbMVfx3.html#sthash.Y2CQ6Dre.dpuf

இந்தியாவை தொடர்ந்தும் அச்சுறுத்தும் நடவடிக்கையில் மகிந்த ராஜபக்ச: பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம்
[ செவ்வாய்க்கிழமை, 27 ஓகஸ்ட் 2013, 05:16.17 AM GMT ]
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையிலும், தமிழக மீனவர்களை கைது செய்துள்ளமை கண்டனத்துக்குதியது என பா.ஜனதா மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இலங்கை செயலுக்கு கண்டனம் தெரிவித்து, இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை தமிழக பா.ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, பா.ஜனதா மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கொலைவெறி தாக்குதல்களுக்கு ஆளாவதும், சிறைபிடிக்கப்படுவதும் வாடிக்கையாகி விட்ட நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையிலே வாடி வருகிறார்கள்.
மத்திய, மாநில அரசாங்கங்கள் உரிய நேரத்தில் அவர்களை மீட்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதன் காரணமாக 26ம் திகதி அதிகாலை தமிழகத்தை சேர்ந்த 35 மீனவர்களை 4 படகுகளோடு இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இதுவரை தமிழகத்தின் வடக்கு கடலோர பகுதிகளில் மட்டுமே வாலாட்டி வந்த இலங்கை கடற்படையினர் தற்போது முதன் முதலாக தமிழகத்தின் தெற்கு கடலோரப்பகுதியில் வைத்து மீனவர்களை கைது செய்து சென்றுள்ளனர் என்ற செய்தி இந்தியாவை அலட்சியப்படுத்தி, அச்சுறுத்தும் செயலாக ராஜபக்சவின் துணிச்சலான முடிவிற்கு வந்ததை காட்டுகிறது.
கொமன்வெல்த் உறுப்பு நாடுகள் மாநாட்டில் கலந்துகொள்ள கேட்டு இலங்கை மந்திரி பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்த நேரத்தில்கூட, இலங்கை சிறைகளிலே வாடும் தமிழக மீனவர்களை விடுதலை செய்யும்படியான எந்த ஒரு கோரிக்கையும் மத்திய அரசாங்கத்தால் வைக்கப்படவில்லை.
இலங்கை இனப்படுகொலையின்போது சிங்கள இராணுவத்தால் ஈழத்தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட போர் குற்றச்செயல்களை விசாரிக்க ஐ.நா.வின் மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை தற்போது இலங்கையில் விசாரணை நடத்தி வரும் நிலையில், தமிழக மீனவர்களை கைது செய்திருப்பது இலங்கை ஐக்கிய நாடுகள் சபையைக்கூட அலட்சியப்படுத்தி இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது.
கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளாது என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும். பிரதமர் மன்மோகன்சிங் மௌனத்தை கலைத்து கொமன்வெல்த் மாநாடு குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் உடனடி கவனம் செலுத்தி இலங்கையின் செயலுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு கைது செய்யப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் உடனடியாக மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக பா.ஜனதா கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRbMVfx1.html#sthash.so4wHUmo.dpuf

Geen opmerkingen:

Een reactie posten