தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 27 augustus 2013

ஆளும் கட்சியின் தேர்தல் பிரசாரத்தில் இலக்கத் தகடற்ற வாகனங்கள்

தியேட்டருக்கு வாருங்கள்! யாழ் அரச அதிகாரிகளுக்கு டக்ளஸ் அச்சுறுத்தல் அழைப்பு: செய்வதறியாது அதிகாரிகள் திணறல்
[ செவ்வாய்க்கிழமை, 27 ஓகஸ்ட் 2013, 04:18.40 AM GMT ]
யாழ்ப்பாணத்தில் தேர்தல் கடமையில் ஈடுபடும் அதிகாரிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடனடியாக தன்னுடைய அலுவலகத்திற்கு வருகை தருமாறு இன்று அவசர அழைப்பு விடுத்துள்ளார்.
தொலைபேசி அழைப்பு மூலம் இந்த அழைப்பானது விடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரின் அலுவலகம் என்று அழைக்கப்படும் தியேட்டரிற்கே அனைவரும் வருகை தர வேண்டும் என்று இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் காலத்தில் அமைச்சர் தேர்தல் விதிமுறைகளை மீறி அரச அதிகாரிகளை அழைத்திருப்பதானது அதிகாரிகளை அச்சுறுத்துவதாக உள்ளதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த அழைப்பினை யாழ்.மாவட்ட் செயலக அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த திடீர் அழைப்பினைத் தொடர்ந்து அதிகாரிகள் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிப் போயுள்ளனர்.
இதேவேளை இவ்வாறான தேர்தல் விதிகளை மீறும் செயற்பாடுகளை தேர்தல் கண்காணிப்பு அழைப்புக்களும் கண்டு கொள்ளாமல் உள்ளதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRbMVfxy.html#sthash.jPE8pdVW.dpuf

ஆளும் கட்சியின் தேர்தல் பிரசாரத்தில் இலக்கத் தகடற்ற வாகனங்கள்
[ செவ்வாய்க்கிழமை, 27 ஓகஸ்ட் 2013, 02:47.04 AM GMT ]
இலக்கத் தகடற்ற வாகனங்கள் தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருவதாக டிரான்ஸ்பெரன்சி இன்டர்நெசனல் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
வடமேல் மற்றும் மத்திய மாகாணசபைத் தேர்தல் பிரசாரப் பணிகளுக்காக இந்த வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ஆளும் கட்சி பிரசாரப் பணிக்காக உலங்கு வானூர்திகள், பிரபுப் பாதுகாப்புப் படைப் பிரிவு அதிகாரிகள், பிரபுப் பாதுகாப்பு விசேட வாகனங்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகின்றன.
ஆளும் கட்சியின் வேட்பாளர்களும், அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இவ்வாறு தேர்தல் விதிகளை மீறிச் செயற்படுகின்றனர்.
பொதுச் சொத்துக்களைப் பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரப் பணிகளில் ஈடுபடுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஆளும் கட்சி வேட்பாளர்கள் அரசாங்க கட்டிடங்களில் கட்சிக் காரியாலயங்களை அமைத்துள்ளனர்.
ஆளும் கட்சி அமைச்சர் ஒருவர் வேட்பாளர் ஒருவருக்காக நடாத்திய கூட்டத்தில், அருகாமையில் உள்ள பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த அனைத்து உயர் அதிகாரிகளையும் பங்கேற்குமாறு உத்தரவிட்டுள்ளதாக டிரான்ஸ்பெரன்சி இன்டர்நெசனல் அமைப்பு தெரிவித்துள்ளது.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRbMVfw6.html#sthash.FJOS3OdK.dpuf

Geen opmerkingen:

Een reactie posten