தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 14 augustus 2013

புத்தகாயா குண்டு தாக்குதல் தொடர்பில் இந்து பூசகர் கைது

காணாமல்போனவர்கள் குறித்து விசாரணை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு நியமனம்
[ புதன்கிழமை, 14 ஓகஸ்ட் 2013, 12:32.38 PM GMT ]
வடக்கு, கி்ழக்கில் போர் நடைபெற்ற காலத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால், ஆணைக்குழுவின் தலைவராக மெக்ஸ்வல் பராக்கிரம சரணகம நியமிக்கப்பட்டுள்ளார்.
மனோ ராமநாதன், சுரஞ்சனா வித்தியாரத்ன ஆகியோர் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கம் நாட்டில் நடைபெற்ற பல சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்த ஆணைக்குழுக்களை நியமித்த போதும் அந்த ஆணைக்குழுக்கள் நடத்திய விசாரணைகளின் அறிக்கைகள் பெரும்பாலும் வெளிவருவதில்லை.
இதனால் தற்போது நியமிக்கப்பட்டுள்ள இந்த ஆணைக்குழுவும் சர்வதேசத்தை ஏமாற்ற அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கையே என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
புத்தகாயா குண்டு தாக்குதல் தொடர்பில் இந்து பூசகர் கைது
[ புதன்கிழமை, 14 ஓகஸ்ட் 2013, 01:26.07 PM GMT ]
இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் உள்ள புத்தகாயா பகுதியின் அமைந்துள்ள மகாபோதி விகாரை பிரதேசத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இந்திய மத்திய புலனாய்வு விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் இந்து பூசகரான அருப் பிரக்மாச்சாரி என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தின் பின்னர், இந்த நபர் பொலிஸாரிடம் சிக்காது தலைமறைவாக இருந்து வந்துள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் புத்தகாயா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரைணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
மேற்படி சம்பவம் தொடர்பில் இந்திய பொலிஸார் பலரிடம் விசாரணைகளை நடத்தி வந்தனர்.
புத்தகாயா மகாபோதி விகாரை இலங்கை மகாபோதி சங்கத்தின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. புத்தகாயா மகாபோதி விகைாரை மீது கடந்த ஜுலை மாதம் 7ம் திகதி குண்டுத் தாக்குதல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten