[ வியாழக்கிழமை, 22 ஓகஸ்ட் 2013, 02:18.43 AM GMT ]
அரசாங்கத்தின் மிரட்டல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் பயப்படமாட்டேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளர் அனந்தி எழிலன் தெரிவித்துள்ளார்.
நேற்று அனந்தி எழிலனுக்கு எதிராக யாழில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்று தொடர்பில் கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தெரிவிக்குழு தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆளும் தரப்பினரும் அதன் பங்காளிகளும் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குச் சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியே நேற்று யாழ். நகரில் இடம்பெற்ற கண்டன ஊர்வலம்.
இலங்கையின் ஜனநாயக அரசியலில் மக்கள் உணர்வுகளை காலில் மிதித்து அவர்களது கருத்துவெளிப்பாட்டு சுதந்திரத்திற்கு தடைப்போட்டு சட்டத்தை கையிலெடுப்பவர்கள் தமக்குதாமே எந்தவித அனுமதியும் பெறாது சுலபமாக கண்டன ஊர்வலங்களை நடத்த முடிகின்றது.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்துவரப்பட்டவர்கள் பலாத்காரமாகவே அழைத்து வரப்பட்டுள்ளனர். ஏனெனில் அவர்களின் கைகளினில் திணிக்கப்பட்ட சுலோக அட்டைகளும் தெளிவாக்கி சுட்டிக் காட்டுகின்றது.
எந்தவிதமான அச்சுறுத்தல்களுக்கும் நான் அடிபணியப் போவதில்லை. மக்களுக்காக குரல்கொடுக்க பின்வாங்கப் போவதில்லை என்பதையும் இங்கு குறிப்பிடுகிறேன்.
முள்ளிவாய்க்காலில் இருந்து கணவனையும் பிரிந்து அநாதரவாக எனது மூன்று பெண் குழந்தைகளுடன் வந்த என்னை என் தேசமும் உறவுகளுமே அடைக்கலம் தந்து மீட்டெடுத்தனர்.
அவ்வகையில் நான் எனது தேசத்திற்கும் மக்களிற்கும் மரணிக்கும்வரை விசுவாசமாக இருக்கவேண்டியவளாக இருக்கின்றேன். காணாமல் போயுள்ள எனது கணவர் முதல் அனைத்து காணாமல் போனவர்களிற்காகவும் நான் குரல் எழுப்பியே வருகின்றேன்.
தமிழ் அரசியல் கைதிகளது விடுதலைக்காக,முன்னாள் போராளிகளது நிம்மதியான வாழ்விற்காக, பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் நலனிற்காக நான் போராடுவேன்.
பாதுகாப்பான வாழ்க்கையை நான் எப்போதோ தொலைத்துவிட்டேன். எமது மக்களை போல என்னிடமும் இழப்பதற்கு ஏதுமில்லை எனத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தெரிவுக்குழு தேசியப் பிரச்சினைக்கு தீர்வாக அமையாது: ஜே.வி.பி
[ வியாழக்கிழமை, 22 ஓகஸ்ட் 2013, 02:49.02 AM GMT ]
பிரச்சினையை திசை திருப்பும் நோக்கில் அரசாங்கம் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் பணிகளை ஆரம்பித்துள்ளதாக ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பின அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களிலும் அரசாங்கம் இவ்வாறான பல்வேறு தெரிவுக்குழுக்களை நியமித்திருந்தது. எனினும் இவற்றின் மூலம் எந்தவிதமான பயனும் ஏற்படவில்லை.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்காமைக்கான காரணத்தை அறியத்தருமாறு கட்சித் தலைவர் கூட்டத்தில் வினவப்பட்டிருந்தது.
நாட்டில் நிலவி வரும் இனப்பிரச்சினையை தமிழ், சிங்கள முஸ்லிம் மக்கள் ஏற்படுத்தவில்லை. எனவே இந்தப் பிரச்சினைக்கு அவர்கள் பொறுப்பதாரிகளல்ல.
நாட்டை ஆட்சி செய்த முதலாளித்துவ வர்க்கத்தின் அதிகார மோகமே பிரிவினைவாதத்தை தூண்டியது.
அரசாங்கத்தின் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்காகவே நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென்ற மெய்யான நோக்கமும், அவசியமும் அரசாங்கத்திற்கு கிடையாது என்றே கருதுகின்றோம் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten