பிரபாகரன் வேடத்தில் நடித்த அஜெய் ரட்ணம் தலைதெறிக்க ஓட்டம் !
21 August, 2013 by admin
மற்றாஸ் கஃபெயில் தேசிய தலைவர் பிரபாகரன் போல வேடமிட்டு நடித்த, தமிழ் நடிகர் அஜெய் ரட்ணம் தனது பேஃஸ் புக் கணக்கை மூடிவிட்டு தலைதெறிக்க ஓடி ஒளிந்துள்ளர் என்று அதிர்வு இணையம் அறிகிறது. இப் படத்தில் அவரே ராஜீவ் காந்தியை கொல்ல கட்டளையும் இடுகிறார். பல்லாயிரக்கணக்கான வாசகர்களை கொண்ட அவரது பேஃஸ் புக் பக்கத்தில், பலர் அவரையே திட்டி எழுத ஆரம்பித்துவிட்டார்கள். ஒரே இரவில் அவர் ரசிகர்கள் எல்லோரும், அவரை அவதூறாக எழுத ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் அதிர்சியடைந்த அஜெய் ரட்ணம் தனது பேஃஸ் புக் எக்கவுண்டை காலவரையறையின்றி மூடியுள்ளார்.
ஆனால் அவரை துரத்துபவர்கள் சும்மா விடவில்லை. அஜெய் ரட்ணத்தின் மோபைல் தொலைபேசியை யாரோ பேஃஸ் புக் ஊடாக பிரசுரித்துள்ள நிலையில், பலர் அவருக்கு தொலைபேசியூடாக அழைப்பு விடுத்து ஏன் இந்தப் படத்தில் நடித்தீர்கள் என்று கேள்வி கேட்க்க ஆரம்பித்து விட்டார்கள். இதேவேளை உள்ளூர் அரசியல் பிரமுகர்களும் இவருக்கு போனைப் போட்டு டாச்சர் கொடுக்க ஆரம்பித்ததால் அவர் தனது மோபைல் போனையும் சுவிஜ் ஆப் செய்து வைத்திருக்கிறார் என்று விடையம் அறிந்த வட்டாரங்கள் அதிர்வு இணையத்துக்கு மேலும் தெரிவித்துள்ளார்கள். இல்லை தமிழில் ஏதோ சொல்வார்களே.... ஆழம் அறியாமல்.... காலை.... அது நான் நடந்திருக்கிறது.
ஆனால் அவரை துரத்துபவர்கள் சும்மா விடவில்லை. அஜெய் ரட்ணத்தின் மோபைல் தொலைபேசியை யாரோ பேஃஸ் புக் ஊடாக பிரசுரித்துள்ள நிலையில், பலர் அவருக்கு தொலைபேசியூடாக அழைப்பு விடுத்து ஏன் இந்தப் படத்தில் நடித்தீர்கள் என்று கேள்வி கேட்க்க ஆரம்பித்து விட்டார்கள். இதேவேளை உள்ளூர் அரசியல் பிரமுகர்களும் இவருக்கு போனைப் போட்டு டாச்சர் கொடுக்க ஆரம்பித்ததால் அவர் தனது மோபைல் போனையும் சுவிஜ் ஆப் செய்து வைத்திருக்கிறார் என்று விடையம் அறிந்த வட்டாரங்கள் அதிர்வு இணையத்துக்கு மேலும் தெரிவித்துள்ளார்கள். இல்லை தமிழில் ஏதோ சொல்வார்களே.... ஆழம் அறியாமல்.... காலை.... அது நான் நடந்திருக்கிறது.
தலைவர் பிரபாகரனுக்கு பதிலாக பாஸ்கரன் : மாய வலையில் மற்றாஸ் கஃபே !
19 August, 2013 by admin
சர்சைக்குரிய திரைப்படமாக இருக்கும் "மற்றாஸ் கஃபே" உலகளாவிய ரீதியில் நாளை மறுதினம் வெளியாகவுள்ளது. புலிகளை ஒரு பயங்கரவாதிகளாக இப் படத்தில் சித்தரித்துள்ளார்கள் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இருப்பினும் இத் திரைப்படத்தின் முழுக் கதையும் பரமரகசியமாகவே உள்ளது. இதோ முதன் முறையாக இந்த ரகசியத்தை அதிர்வு இணையம் வெளியிட உள்ளது.
குறிப்பிட்ட இத் திரைப்படத்தில், LTTE என்ற இயக்கத்துக்கு பதிலாக LTF என்ற இயக்கம் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த LTF இயக்கம் தானாம் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொலைசெய்தார்கள் என்றும், அதற்கான கட்டளையை அவ்வியக்கத்தின் தலைவர் நேரடியாகப் பிறப்பித்தார் என்றும் படமாக்கப்பட்டுள்ளது. இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால் , தேசிய தலைவர் பிரபாகரனைப் போல ஒரு ஆளை தயார் படுத்தி, அவரே LTF இன் தலைவர் என்றும், அவர் பெயர் பாஸ்கரன் என்றும் பெயரிட்டுள்ளார்கள். அதாவது (பிரபா)கரன் ..... இந்த கடைசி மூன்று எழுத்துக்களையும் ("கரன்") பாஸ் கரன் என்று என்று போட்டுள்ளார்கள்.
குறிப்பிட்ட இந்த பாஸ்கரன் என்னும் தலைவர், ராஜீவ் காந்தியைக் கொலைசெய்ய உத்தரவிடுவதுபோலவும், இதேவேளை இந்திய புலனாய்வுப் பிரிவின் ஏஜன்ட் டாக கதாநாயன ஜோன் ஏபிரகாமும் நடித்துள்ளார். இந்திய புலனாய்வு நிறுவனமான "றோ" அதிகாரியாக விக்கிரம் சிங் என்னும் பெயரில் ஜோன் ஏபிரகாம் நடித்துள்ளார். இவர் கள்ளத்தோணியில் யாழ்ப்பாணம் சென்று துப்பறிவதும். புலிகளே அதாவது அவர்கள் பாணியில் LTF என்னும் இயக்கமே ராஜீவ் கொலையைச் செய்தார்கள் என்றும் இவர் கண்டுபிடிக்கிராராம். இதுதான் ஒட்டுமொத்த கதை. இதற்கிடையே இலங்கை ஒரு அமைதியான நாடு என்றும், அங்கே LTF என்னும் இயக்கத்தால் தான் போர் வெடித்தது என்பது போன்ற காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளது.
தமிழ் நாட்டில், புலிகளைப் பற்றி அவதூறாகப் பேசினாலே சும்மா விடமாட்டார்கள். இன் நிலையில் இதனைப் படமாக்கி வெளியிட ஜோன் ஏபிரகாமுக்கு யார் துணிவு கொடுத்தது என்று தெரியவில்லை. எல்லாம் நான் இருக்கிறேன் என்று மகிந்தர் கூறிய வார்த்தையை நம்பி களத்தில் இறங்கி, தற்போது பெரும் பிரச்சனையில் சிக்கியுள்ளார் ஜோன் ஏபிரகாம். நாம் தமிழர் கட்சியினர், மதிமுக கட்சியினர், மற்றும் திமுக, போன்ற பெரிய அரசியல் கட்சிகள் இப் படத்தை திரையிட தாம் அனுமதிக்கப்போவது இல்லை என்று தெரிவித்துள்ளமை மிகவும் வரவேற்க்கத்தக்க விடையம் ஆகும்.
Geen opmerkingen:
Een reactie posten