தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 27 augustus 2013

13வது அரசியல் அமைப்பில் குறைகள் உண்டு! அதனை மாற்ற இந்தியாவின் ஆலோசனை தேவை: விக்னேஸ்வரன்!

அதிபர், ஆசிரியர்கள் தமது அரசியல் உரிமைகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்!: இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்
[ திங்கட்கிழமை, 26 ஓகஸ்ட் 2013, 03:42.46 PM GMT ]
நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் அதிபர்களும் ஆசிரியர்களும் தமது அரசியல் உரிமைகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சங்கத்தின் தலைவர் வி.ரி.சகாதேவராஜா, பொதுச் செயலாளர் சரா.புவனேஸ்வரன் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
அரசியல் சார்ந்த கருத்துக்களில் தெளிவில்லாதவர்களுக்கு தெளிவை ஏற்படுத்த வேண்டியது அதிபர்கள், ஆசிரியர்களின் தலையாய கடமையாகும்.
மாணவப் பருவத்திலேயே அரசியல் அறிவைப் பெற்றுக் கொள்வதற்கு வழிகாட்டிகளாக இருப்பவர்கள் ஆசிரியர்களே. அரசியல் விஞ்ஞானத்தை ஒரு பாடமாகக் கற்பிக்கும் ஆசிரியர்கள் இதில் மிக முக்கியமானவர்கள்.
அரசியலில் ஈடுபடுதல், வாக்களிக்கும் உரிமை, வாக்களிப்பு முறை என்பன தொடர்பாக எமது மக்களிடத்தே நெடுங்காலமாக தெளிவின்மை காணப்படுகின்றது. அதற்கு கடந்த காலங்களில் தேர்தல்களில் மக்களுக்கு முறையான விருப்பங்கள் இருக்கவில்லை என்பது உண்மை. அதற்கு கடந்தகால தேர்தல்களில் நம்பிக்கையின்மை மற்றும் ஜனநாயகத்தில் நம்பிக்கையின்மையை காரணமாகக் கூற முடியும்.
ஆனால் அந்த விருப்பமின்மை தொடருமாக இருந்தால் அரசியல் ரீதியாக பெறக் கூடிய உரிமைகள், வெளிப்படுத்தக்கூடிய கருத்துக்கள் என்பவற்றை ஜனநாயக விரோதிகள் துஸ்பிரயோகம் செய்வதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தும்.
எந்தவொரு தேர்தலாக இருந்தாலும் அது ஜனநாயக முறைப்படி நடைபெறுவதனை உறுதிப்படுத்துபவர்கள் அதிபர் ஆசிரியர்களே. இவர்களில் பெரும்பாலானவர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுபவர்கள்.
பொதுவாக எம்மவர்கள் கடந்தகாலங்களில் மிகக்குறைவான வீதத்திலேயே வாக்களித்திருந்தார்கள். அந்நடைமுறை இம்முறை தொடர்ந்தால் நம்மை நாம் ஆளுகின்ற நிலை எம்மை விட்டுச் சென்று விடும்.தெரிந்தோ தெரியாமலோ தேர்தலொன்றுக்குள் உள்ளீர்க்கப்பட்டுள்ளோம். எனவே 100 வீதம் வாக்களிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
எனவே நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்கும் உரிமையைச் சரியாகப் பயன்படுத்துவதற்கு அதிபர்களும் ஆசிரியர்களும் வழிகாட்டிகளாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.
ஆரம்ப வருடாந்த சம்பளமாக ரூபா 74160.00ஐ பெறுகின்றவர்களுக்கும் அதற்கு மேலே பெறுகின்றவர்களுக்கும் வருடாந்த சம்பள எற்றமாக ரூபா 1560.00ஐயும் அதற்கு மேலேயும் பெறுகின்ற பதவிநிலை உத்தியோகத்தர்களுக்கு அரசியல் உரிமைகள் கிடையாது.
அதாவது இலங்கை கல்வி நிர்வாக சேவை அனைத்து தரத்திலும் உள்ளவர்களுக்கும் இலங்கை ஆசிரிய கல்வியாளர் சேவை அனைத்து தரத்திலும் உள்ளவர்களுக்கும் அரசியல் உரிமை கிடையாது.
ஆனால் அதிபர் சேவை, ஆசிரிய சேவை அனைத்து தரத்திலும் உள்ளவர்களுக்கு அரசியல் உரிமை உண்டு. இதனை அதிபர்கள் ஆசிரியர்கள் சரியாகப் புரிந்து கொண்டு நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் தமது பங்களிப்பினை பூரணமாகப் பயன்படுத்தி மாணவர்களுக்கான இளைஞர், யுவதிகளுக்கான, மக்களுக்கான முறையான தேர்தல் விதிமுறைகளையும் வாக்களிக்கும் முறைகளையும் தெளிவுபடுத்தி சகலரையும் வாக்களிக்கச் செய்யுமாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRaMVfv0.html#sthash.9rHmrPbw.dpuf

13வது அரசியல் அமைப்பில் குறைகள் உண்டு! அதனை மாற்ற இந்தியாவின் ஆலோசனை தேவை: விக்னேஸ்வரன்
[ திங்கட்கிழமை, 26 ஓகஸ்ட் 2013, 04:32.21 PM GMT ]
13வது அரசியல் அமைப்பில் பல குறைகள் உள்ளன. எனினும் அவற்றை இந்தியாவின் ஆலோசனை இன்றி மாற்ற முடியாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை முதன்மை வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 
தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்காகவே 13வது அரசியலமைப்பு தீர்வாக கொண்டு வரப்பட்டது.

அது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சர்வதேச உடன்படிக்கையாகும்.

எனவே அதனை இந்தியாவின் ஆலோசனை இன்றி மாற்றமுடியாது என்று விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவுடன் கட்டாயமாக அது தொடர்பில் ஆலோசிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

13வது அரசியல் அமைப்பில் சேர்த்துக்கொள்வதற்காக தமிழர்கள் பல யோசனைகளை முன்வைத்தனர். எனினும் அவை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

எனவேதான் அந்த அரசியல் அமைப்பில் குறைகள் ஏற்பட்டன என்று திரு.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரச்சினைகளை கொண்டிருக்கும் இலங்கை தமிழர்கள், அதனை பெரும்பான்மை சிங்களவர்கள் அறிந்துக்கொள்ளாதவிடத்து ஆச்சரியப்படுகின்றனர்.

இந்தநிலையில் அரசாங்கத்தின் பொய்யான வாக்குறுதிகளுக்கு பதிலளிக்கும் வகையில் வடக்கு மக்கள் மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிப்பர் என்று விக்னேஸ்வரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRaMVfv2.html#sthash.VfZZsJTA.dpuf

Geen opmerkingen:

Een reactie posten