தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 24 augustus 2013

ஊடகவியலாளர் வீட்டில் கொள்ளை: பரஸ்பர மோதலில் ஒருவர் பலி! எழுவர் படுகாயம்- உயிருக்கு அச்சுறுத்தும் செயலே இச்சம்பவம்

கொடிகாமம் மீசாலைப் பகுதியில் அங்கஜனின் குண்டர்களுக்கு பொது மக்கள் தர்ம அடி: இரவிரவாக கடும் அட்டகாசம்
[ சனிக்கிழமை, 24 ஓகஸ்ட் 2013, 02:58.51 AM GMT ]
யாழ்.மாவட்ட சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் அங்கஜன் இராமநாதனின் அடியாட்கள் கொடிகாமம் மீசாலைப் பகுதியில் பொது மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த சம்பவத்தினால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. கொடிகாமம் மீசாலைப் பகுதியிலுள்ள பஸ்தரிப்பு நிலையம் ஒன்றை பொது மக்கள் தமது சொந்தப் பணத்தினைச் செலவு செய்து புனரமைப்பு செய்து வைத்திருந்தனர்.
இந்த பஸ் தரிப்பு நிலையத்தில் அங்கஜனின் குண்டர்கள் தேர்தல் பிரசார துண்டுப் பிரசுரங்களை ஒட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட போது புனரமைப்பிற்கான பணத்தினை வழங்கிய அன்பர் ஒருவர் அதனை தடுக்க முயன்றுள்ளார்.
இதன்போது குண்டர்கள் அவர் மீது தாக்குதல் மேற்கொள்ள முற்பட்ட வேளை பொது மக்கள் அவரை காப்பாற்றியதோடு, குண்டர்களோடு முரண்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து பொது மக்கள் அங்கஜனின் குண்டர்களை நையப் புடைத்து அனுப்பியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இராணுவத்தின் உதவியுடன் இரவிரவாக அப்பகுதியெங்கும் அங்கஜனின் குண்டர்கள் குறிப்பிட்ட சிலரை தேடி அலைந்துள்ளனர். இதனால் நேற்றிரவு முழுவதும் அப்பகுதியெங்கும் பெரும் பரப்பு ஏற்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 http://www.tamilwin.net/show-RUmryIRYMVgr6.html#sthash.Pcyir9j8.dpuf

ஊடகவியலாளர் வீட்டில் கொள்ளை: பரஸ்பர மோதலில் ஒருவர் பலி! எழுவர் படுகாயம்- உயிருக்கு அச்சுறுத்தும் செயலே இச்சம்பவம்
[ சனிக்கிழமை, 24 ஓகஸ்ட் 2013, 03:07.07 AM GMT ]
பம்பலபிட்டி - மிலாகிரிய - டிக்மன் வீதி பகுதியில் பொலிஸாருக்கும் கொள்ளை குழுவிற்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு 7 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள இலங்கையின் ஆங்கில நாளிதழ் ஒன்றின் ஊடகவியலாளரது வீட்டில் 5 பேர் கொண்ட குழுவொன்று இன்று  அதிகாலை கொள்ளையிடச் சென்றுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த பொலிஸார் அவ்விடத்திற்குச் சென்று கொள்ளையர்களை மடக்கிப் பிடிக்க முற்பட்டபோது பொலிஸாருக்கும் கொள்ளை குழுவிற்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதன்போது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் ஒரு கொள்ளையர் உயிரிழந்துள்ளதோடு மேலும் நான்கு கொள்ளையர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இச்சம்பவத்தில் கொள்ளையர்களின் தாக்குதலில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து பம்பலபிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஊடகவியலாளர் வீட்டில் இடம்பெற்ற சம்பவம் அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் முயற்சி- இலங்கை ஊடகவியலாளர்களின் தொழிற்சங்கம்
ஊடகவியலாளர் மந்தனா அபேவிக்ரமவின் வீட்டுக்கு சென்றவர்கள் கொள்ளையர்கள் அல்ல என்று தெரிவித்த, இலங்கை ஊடகவியலாளர்களின் தொழிற்சங்கத்தின் செயலாளர் பிரியந்த கருணாரத்ன இது ஊடக அடக்குமுறையின் மற்றுமொரு நடவடிக்கை என கூறினார்.
தொழிற்சங்கத்தின் தலைவியும் சண்டே லீடர் பத்திரிக்கையின் ஊடகவியலாளருமான மந்தனா அபேவிக்ரமவின் பம்பலப்பிட்டியில் உள்ள வீட்டில் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் தேடிபார்ப்பதற்காக அங்கு சென்ற பொழுது செய்தியாளர்களிடம் அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மந்தனாவின் ஊடக நடவடிக்கைகளினால் அவரை பெரும் தலைவலியாக கருதுபவர்கள் திட்டமிட்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
மந்தனாவின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை சம்பவத்தை அவதானிக்கும் போது காணக் கூடியதாக இருக்கின்றது.
குறிப்பாக இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஒரு தேசிய பத்திரிகை, மந்தான ஊடகத்தை கையாளும் விதம் தொடர்பில் விமர்சித்திருந்ததுடன் இலங்கை ஊடகவியலாளர் தொழிற்சங்கம் தேசதுரோக நடவடிக்கையில் ஈடுபடும் குழு என்று முத்திரை குத்த முயற்சித்தது.
சில தினங்களுக்கு முன்னர் மந்தனாவின் வீட்டுக்கு எதிரில் இறந்த பூனையில் உடல் போடப்பட்டிருந்தது. அந்த சம்பவத்திற்கு முதல் நாள் மந்தனாவின் கணவரான ரொமேஷின் கார் டயர் வெட்டப்பட்டிருந்தது.
மந்தனாவின் வீட்டுக்கு அருகில் கண்காணிப்பு குழு இருந்துள்ளதை இந்த சம்பவங்கள் எடுத்து காட்டியுள்ளன.
ஊடகவியலாளருக்கு இடையூறு ஏற்படுத்த அல்லது அவரை கொலை செய்ய சென்றவர்கள், ஊடகவியலாளரின் கணவரது உடனடியான செயற்பாடுகள் காரணமாகவே சிக்கிக் கொண்டனர் என்றார்.
http://www.tamilwin.net/show-RUmryIRYMVgr7.html#sthash.gSwyweHN.dpuf

Geen opmerkingen:

Een reactie posten