[ திங்கட்கிழமை, 26 ஓகஸ்ட் 2013, 03:33.12 AM GMT ]
சுயாதீன மற்றும் நீதிக்கான தேர்தல் கண்காணிப்பு அமைப்பான ‘கபே’ இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை யாழ்ப்பாணம் வருகை தரவுள்ள நிலையில் நாளை செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.
நவநீதம்பிள்ளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களை சந்திப்பாராக இருந்தால் ஏனைய அரசியல் கட்சிகளையும் சந்திக்க வேண்டும் என்றும் கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் கோரியுள்ளார்.
நவிபிள்ளையின் வருகையை முன்னிட்டு நாளை யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!- நவிபிள்ளைக்கு எதிராக இன்று கொழும்பில் ராவணா பலய போராட்டம்!
[ திங்கட்கிழமை, 26 ஓகஸ்ட் 2013, 06:02.55 AM GMT ]
காணாமல் போனோரை கண்டறியும் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கவனயீர்ப்பு போராட்டம், நாளை முற்பகல் 10 மணிக்கு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்த காலத்தில் காணாமல் போனவர்கள் மற்றும் யுத்தத்தின் இறுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் காணாமல் போனவர்களை கண்டறிதல் தொடர்பாகவும், சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளதும், புனர்வாழ்வு முகாம்களிலுள்ள முன்னாள் போராளிகளதும் விடுதலை தொடர்பாகவும், இராணுவம் மற்றும் அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் காணி சுவீகரிப்பு, சிங்கள, பௌத்த மயமாக்கல் தொடர்பாகவும் மற்றும் தமிழ் மக்கள் மீது புரியப்பட்டதாகக் கூறப்படும் இன அழிப்புத் தொடர்பாக சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணையை வலியுறுத்தியும் நவநீதம்பிள்ளை அம்மையாரின் கவனத்தை ஈர்க்கும் முகமாகவுமே இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கவனயீரப்பு போராட்டத்துக்கு தமிழ்த் தேசிய மக்கள் மக்கள் முன்னணி முழுமையான ஆதரவை வழங்குகின்றதுடன் காணாமல் போனவர்களது குடும்பங்கள், காணி சுவீகரிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள், அரசியல் கைதிகளது குடும்பங்களை சார்ந்தவர்கள் உட்பட அனைத்துப் பொதுமக்களையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்' என்று த.தே.ம.மு.வின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நவனீதம்பிள்ளைக்கு எதிராக ராவணா பலய போராட்டம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு எதிராக ராவணா பலய அமைப்பு போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.
கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் காரியாலயத்திற்கு முன்னால் இந்த போராட்டம் நடத்தப்படுகின்றது.
பௌத்த பிக்குகள் மற்றும் அந்த அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் காரியாலயத்திற்கு முன்னால் போராட்டத்தை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நவனீதம்பிள்ளைக்கு எதிராக ராவணா பலய அமைப்பினர் கோஷமெழுப்பி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
போராட்டம் காரணமாக பௌத்தாலாக மாவத்தையின் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நவனீதம்பிள்ளையின் இலங்கை விஜயத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என ராவணா பலய அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு எதிராக கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவகத்திற்கு எதிரில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறுகிறது.
இதன் காரணமாக கொழும்பு பௌத்தலோக்க மாவத்தையின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது.
இராவணா சக்தி அமைப்பினால் நடத்தப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந் தொகையான பிக்குகளும், அவர்களின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டுள்ளதாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட இராவணா சக்தி அமைப்பின் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர்,
நவநீதம்பிள்ளை இலங்கைக்கு வந்து நாட்டின் அழகை ரசித்து விட்டுச் செல்வதில் எந்த பிரச்சினையுமில்லை.
இதனை விடுத்து, அவர் நாட்டுக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்தால், அதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இறந்த புலிகளின் புதைக்குழிகளை தோண்டி கடந்த காலத்தை கிளறி, இலங்கை போன்ற வறிய நாட்டுக்கு எதிராக செயற்படுவதே அவரது இலங்கையின் வருகையின் நோக்கம் என்றார்.
Geen opmerkingen:
Een reactie posten