தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 26 augustus 2013

வெலிவேரிய சம்பவத்துடன் 58 இராணுவத்தினர் சம்பந்தப்பட்டுள்ளனர்

நவி.பிள்ளை அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவை சந்தித்தார்
[ திங்கட்கிழமை, 26 ஓகஸ்ட் 2013, 01:21.47 PM GMT ]
இலங்கை சென்றுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று மதியம் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவை அவரது அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார்.
அதேவேளை இன்று முற்பகல் புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸை சந்தித்த மனித உரிமை ஆணையாளர், அதன் பின்னர், சட்டமா அதிபர் பாலித பெர்ணான்டோவையும் சந்தித்தார்.
மனித உரிமை ஆணையாளர் இன்று மாலை வடக்கிற்கு பயணம் செய்ய உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
 See more at: http://www.tamilwin.net/show-RUmryIRaMVfu4.html#sthash.YnstdOVJ.dpuf

வெலிவேரிய சம்பவத்துடன் 58 இராணுவத்தினர் சம்பந்தப்பட்டுள்ளனர்
[ திங்கட்கிழமை, 26 ஓகஸ்ட் 2013, 12:34.15 PM GMT ]
வெலிவேரிய ரத்துபஸ்வல பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவத்துடன் 58 இராணுவத்தினர் சம்பந்தப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் நியமிக்கப்பட்ட இராணுவ நீதிமன்றத்திடம் ஆதாரங்கள் வழங்கப்பட்டிருந்ததுடன், அண்மையில் அறிக்கையுடன் அந்த ஆதாரங்கள் இராணுவத் தளபதியிடம் வழங்கப்பட்டதாக இராணுவம் கூறியுள்ளது.
இராணுவ நீதிமன்றம் 72 சாட்சியங்களை பதிவுசெய்துள்ளது. இராணுவத்தினர், பொலிஸார், காயமடைந்தவர்கள், சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியாளர்கள் இதில் அடங்குகின்றனர் என இராணுவத் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க, மேஜர் ஜெனரல் என்.ஏ.ஜே.சி டயஸ் தலைமையில் 5 சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளை கொண்ட நீதிமன்றத்தை நியமித்தார்.
இராணுவ நீதிமன்றத்தின் அறிக்கையை தற்போது இராணுவத்தின் சட்டப் பிரிவின் பணிப்பாளர் பரிசீலித்து வருவதாகவும் இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRaMVfu3.html#sthash.rS7zebzd.dpuf

Geen opmerkingen:

Een reactie posten