தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 24 augustus 2013

'மக்களின் அமைதியான வாழ்வுக்காகவே வீடுகளை பிடித்து வைத்திருந்தோம்'

'மக்களுடைய அமைதியான வாழ்வுக்கும் பெறப்பட்ட நிம்மதியை மீண்டும் புலிகள் குழப்பாமல் இருக்கவும் அவர்களிடமிருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவுமே 1995ஆம் ஆண்டின் பின்னர் நாம் பல நூற்றுக்கணக்கான வீடுகளையும் இடங்களையும் பிடித்து வைத்திருந்தோம்' என யாழ்.மாவட்ட படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார். இது எப்படி இருக்கு ?

'மக்களுடைய சொத்துக்களை விடுதலை புலிகள் பறித்து வைதிருந்த காலத்திலும் சரி படையினர் வைத்திருந்த காலத்திலும் சரி மக்கள் பட்ட துன்ப துயரங்களை நான் நன்கு உணர்ந்துள்ளளேன். அந்த வகையில் மக்களுடைய விடுகள் காணிகள் இன்று மீள கையளிக்கப்படும் நிலையில் அவர்களுடைய மகிழ்ச்சியையும் புரிந்துகொண்டுள்ளேன்' எனவும் அவர் தெரிவித்துள்ளார். யாழ்.சுன்னாகத்தில் இடம்பெற்ற வீடுகள் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். விடுதலைப் புலிகள் சில பொதுமக்களது வீடுகளைப் பாவித்தார்கள். பின்னர் திருப்பிக்கொடுத்தார்கள். ஆனால்...

படையினர் பாவித்த வீடுகளில் உள்ள பொருட்கள் இல்லை, ஓடுகள் இல்லை, மரக் கதவுகள் இல்லை ... ஏன் தீராந்திகளே இல்லை. அனைத்தையும் களவாடி விற்று சுட்டு தென்பகுதில் உள்ள தமது உறவுகளுக்கு பணமாக அனுப்பிவிட்டார்கள். இந்த நிலையில் வெறும் கல்லும் மண்ணும் தான் வீட்டில் மிச்சமாக உள்ளது. இதனைப் பற்றி இவர் எதுவுமே பேசவில்லையே ...


Geen opmerkingen:

Een reactie posten