தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 31 augustus 2013

கடலூரில் வெடிகுண்டு சோதனை நடத்திய புலிகள் சென்னையில் கைது !

கடலூரில், வெடிகுண்டு சோதனை நடத்திய குற்றத்திற்காக, தேடப்பட்டு வந்த, விடுதலை புலிகள் அமைப்பைச் சேர்ந்த இருவர், நேற்று சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டனர் என அதிர்வு இணையம் அறிகிறது. 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் போரின்போது அங்கிருந்து தப்பிய , சிவநேசன் மற்றும் மகேஸ்வரன் ஆகியோர் தமிழகத்திற்குச் சென்றுள்ளார்கள். சமீபத்தில் அவ்விருவரும் மற்றும் வேறு இருவரும் இணைந்து குண்டுகளைத் தாயாரித்து அதனை கடலூரில் உள்ள முந்திரிக் காட்டில் பரிசோதிக்க முயன்றுள்ளார்கள். இதனையடுத்து அங்கே விரைந்த பொலிசார் அவர்கள் நால்வரையும் கைதுசெய்ய முயன்றார்கள். இருப்பினும் சிவநேசன் மற்றும் மகேஸ்வரன் ஆகியோர் தப்பித்து விட்டார்கள்.

பொலிசார் மற்றைய இருவரையும் கைதுசெய்தார்கள். சில காலம் மறைவாக இருந்த இவ்விருவரும் நேற்று முன் தினம் சென்னைக்குச் சென்றுள்ளார்கள். அங்கேவைத்து நேற்றைய தினம் தமிழக கியூ பிரிவு பொலிசார் சிவநேசன் மற்றும் மகேஸ்வரனை கைதுசெய்துள்ளனர் என தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர், தாம் ஏதாவது செய்யவேண்டும் , மீண்டும் ஒரு வியூகத்தை வகுக்கவேண்டும் என அயராது உழைத்தவர்கள் இவர்கள். தற்போது கைதாகியுள்ள இவ்விருவரையும் சிலவேளை இந்திய அரசு நாடுகடத்தும் வாய்ப்புகள் உள்ளது. இலங்கை அரசை திருப்த்திப்படுத்த இத்தனைய செயலை இந்தியா செய்ய முயலும்.

எனவே தமிழகத்தில் உள்ள உணர்வாளர்கள், இதனை தடுக்கவேண்டும் என உலகத்தமிழர்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.


Geen opmerkingen:

Een reactie posten