தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 31 augustus 2013

போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்படலாம்?: ஊடகவியலாளர் சந்திப்பில் நவி.பிள்ளை!



போரின் இறுதிக்கட்டத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் நம்பிக்கையான விசாரணைகளை நடத்த தவறினால் சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்படும் வாய்ப்பு இருப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்தார்.
உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அவர், தனது பயணத்தின் இறுதி நாளான இன்று கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எனது இந்திய தமிழ் பாரம்பரியத்தை அடிப்படையாக கொண்டு இலங்கையில் ஊடகங்கள், அமைச்சர்கள், வலையத்தளங்கள் மற்றும் பல்வேறு பிரசாரகர்கள் என்னை ஒரு புலிகளின் கருவி என பல வருடங்களாக விமர்சித்து வருகின்றனர்.
நான் விடுதலைப்புலிகளிடம் சம்பளத்தை பெற்றுக்கொண்டு ஐக்கிய நாடுகள் அமைப்பில் இருப்பதாக கூறுகின்றனர்.
விடுதலைப்புலிகள் போன்ற அமைப்புகளுக்கு ஆதரவு வழங்கும் புலம்பெயர்ந்தவர்களுக்கு, ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் இருந்து எந்த கௌரவத்தையும் எதிர்பார்க்க முடியாது.
இது மிகப்பெரிய தவறான குற்றச்சாட்டு மட்டுமல்ல பாரிய தாக்குதலாகும். கடந்த வாரத்திலும் அரசாங்கத்தின் குறைந்தது மூன்று அமைச்சர்கள் அசாதாரணமான கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.
எனினும் ஜனாதிபதி சில அமைச்சர்கள் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் மன்னிப்பு கோரினார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கின்றேன்.
காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்டுள்ள புதிய ஆணைக்குழு பற்றிய மேலதிக தகவல்களை அரசாங்கத்திடம் கேட்டறிந்தேன்.
இந்த ஆணைக்குழுவானது கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட இது போன்ற ஆணைக்குழுக்களை விட புதிய ஆணைக்குழு மிகவும் பயனுள்ளதாக இருக்க வேண்டிய தேவையை வலியுறுத்தினேன்.
வடக்கு, கிழக்கில் மட்டும் காணாமல் போனவர்கள் தொடர்பாக ஆராய கிடைத்தமை ஏமாற்றத்தை அளிக்கிறது.
கடந்த வருடங்களில் கொழும்பு உட்பட நாட்டின் ஏனைய பகுதிகளில் வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவங்கள் பற்றிய பல முறைப்பாடுகள் கிடைத்தன. அவை தொடர்பான விடயத்தில் இருந்தும் தவறி விட மாட்டோம் என்றார்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIQVMWmpy.html#sthash.ajWdVtXs.dpuf

Geen opmerkingen:

Een reactie posten