[ திங்கட்கிழமை, 26 ஓகஸ்ட் 2013, 06:13.37 AM GMT ]
ஹட்டனில் ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மலையகத்தில் ஆளும் கட்சியின் சின்னத்திற்கு வாக்குகளை அதிகரிக்க திகாம்பரத்தை தாக்குமாறு அமைச்சர் தொண்டமானிடம் கூறிய ஜனாதிபதி தொண்டமானை தாக்குமாறு திகாம்பரத்திடம் கூறியுள்ளார்.
இதன் பிரதிபலன் கடந்த 18 ம் திகதி வெளியில் தெரிய ஆரம்பித்தது. ஜனாதிபதி எதிர்பார்த்ததை இவர்கள் இருவரும் திறம்பட செய்து வருகின்றனர்.
அதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை மீது குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் முன்வைத்த ஆளும் கட்சியின் அமைச்சர்கள், அவர் வரும் போது எங்கு இருந்தனர் என்பதை தேடிப்பிடிக்க முடியவில்லை.
நாட்டில் மனித உரிமைகள் மீறப்படவில்லை என்று அரசாங்கம் கூறினாலும் அரசாங்கமே நாட்டில் மனித உரிமைகளை மீற வருகிறது. இதற்கு சிறந்த உதாரணம் அண்மையில் இடம்பெற்ற ரத்துபஸ்வல சம்பவம்.
இந்த சம்பவத்தில் இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தி மூன்று அப்பாவிகளை கொலை செய்தது என்றார்.
படகு மூலம் அவுஸ்திரேலியா சென்ற 11 பேர் மீண்டும் தாயகம் திரும்பினர்!
[ திங்கட்கிழமை, 26 ஓகஸ்ட் 2013, 06:21.46 AM GMT ]
மட்டக்களப்பு, கல்லாறு, வாழைச்சேனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 11 பேரே கடந்த வெள்ளிக்கிழமை, தாயகம் திரும்பியுள்ளனர்.
சர்வதேச புலம்பெயர்ந்தவர்களுக்கான அமைப்பு ஊடாக தாங்கள் நாடு திரும்பியதாக, 11 பேரினுள் ஒருவர் தெரிவித்தார்.
ஒன்றரை வருடங்களாக அவுஸ்திரேலியாவில் தான் தங்கியிருந்த போது, தொழில் புரியவும் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.
தங்களது புகலிடக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும் என்பது தொடர்பில் நம்பிக்கையீனம் ஏற்பட்டதைத் தொடர்ந்து தாயகம் திரும்புவதற்கு முடிவு எடுத்ததாகவும் அவர் கூறினார்.
அநேகமாக இலங்கையர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் சுயவிருப்பத்தின் பேரில் நாடு திரும்ப வேண்டும். தாயகத்திற்கு திருப்பி அனுப்பும் நிலையே தற்போது அங்கு காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Geen opmerkingen:
Een reactie posten