தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 22 augustus 2013

பொதுநலவாய மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்: பாஜக ஆர்ப்பாட்டம்

இராணுவத் தலையீட்டினாலேயே வெலிவேரியவில் மக்கள் கொல்லப்பட்டனர்!– சுமந்திரன்
[ வியாழக்கிழமை, 22 ஓகஸ்ட் 2013, 04:03.58 AM GMT ]
இராணுவத் தலையீடு காரணமாகவே வெலிவேரிய ரத்துபஸ்வல சம்பவத்தில் மக்கள் கொல்லப்பட்டனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர்களது குடும்பங்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.
நிராயுதபாணிகளான பொதுமக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும்.
ரத்துபஸ்வல சம்பவத்தைப் போன்ற சம்பவங்கள் வடக்கிலும் இடம்பெறுகின்றன.
இராணுவத்தினர் தலையீடு செய்த காரணத்தினாலேயே இந்த சம்பவம் பூதாகாரணமானது என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வெலிவேரிய சம்பவம் குறித்து நாடாளுமன்றில் நடைபெற்ற விவாத்ததின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுநலவாய மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்: பாஜக ஆர்ப்பாட்டம்
[ வியாழக்கிழமை, 22 ஓகஸ்ட் 2013, 07:00.49 AM GMT ]
பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வலியுறுத்தி பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நவம்பரில் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் பங்கேற்குமாறு அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸ், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நேரில் அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமான அந்தநாட்டு ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு தண்டனை வழங்க வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் இலங்கையில் நடைபெறும் பொதுநலவாயநாடுகளின் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் இந்தியாவின் சார்பில் யாரும் பங்கேற்கக் கூடாது. அதோடு பொதுநலவாய அமைப்புக்கு இலங்கை ஜனாதிபதி தலைமை வகிக்கும் வரை அதிலிருந்து இந்தியா விலகி இருக்க வேண்டும்.
இதனையும் மீறி மாநாட்டில் பங்கேற்றால், தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை இந்தியா அங்கீகரித்ததாகிவிடும். எனவே மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி ஓகஸ்ட் 24ம் திகதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.
மெட்ராஸ் கபே படத்தை திரையிடக் கூடாது, இலங்கைத் தமிழர்களின் துயரங்களை அறியாமல், அவர்களை தீவிரவாதிகளைப்போல சித்தரித்து மெட்ராஸ் கபே என்ற பெயரில் திரைப்படம் எடுத்திருப்பது கண்டனத்துக்குரியது.
இப்படத்தை தமிழகம் மட்டுமல்ல, நாட்டில் எங்கும் திரையிட அனுமதிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten