தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 27 augustus 2013

தமிழ்நாட்டில் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள் உண்ணாவிரதம்!



தமிழ்நாட்டின் செங்கல்பட்டு என்னும் இடத்தில் உள்ள சிறைச்சாலை போன்ற சிறப்பு முகாம்களில் இலங்கைத்தமிழ் அகதிகளானஇளைஞர்கள் பல பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
அவர்களில் ஒருவரான திரு. சந்திரகுமார் என்பவருடன் தொலைபேசியில் நாம் தொடர்புகொண்டு நேர்கண்டபோது அவர் கூறியவிபரங்களை கீழே தருகின்றோம்.
கேள்வி: நீங்கள் எவ்வளவு காலமாக செங்கல்பட்டு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளீர்கள்?
பதில்: நான் இங்கு 40 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளேன். என்னைப்போல இங்கு பல இளைஞர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். எங்களுக்கு எதிராக வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. சாதாரணமாக வழக்கு தொடங்கப்பட்டு 3மாதங்களின் பின்னர் எமக்கு பிணை வழங்கப்பட வேண்டும். பிணை வழங்கப்பட்டால் நான் வெளியில் இருந்து கொண்டேவழக்கை எதிர்கொள்ள முடியும்.
இந்த நிலையில் இந்திய குற்றவியல் சட்டம் இலங்கைத்தமிழ் அகதிகள் விடயத்தில் ஒரு வித்தியாசமான நிலையைஉருவாக்கியுள்ளது. அதாவது, மியன்மார், வங்காள தேசம், நேபாளம் போன்ற நாடுகளில் இருந்து வரும் அகதிகள் இந்தியகுற்றவியல் சட்டத்தின் பிரகாரம் அதியுச்ச குற்றமாக கருதப்படும் கற்பழிப்பு, கொலைக்குற்றம் புரிந்ததற்கே மூன்று மாதத்தில்பிணை வழங்கப்பட்டு குற்றவாளிகள் வெளியிலிருந்தபடியே வழக்கை தொடர முடியும். ஆனால் இலங்கைத்தமிழ் அகதிகள்விடயத்தில் அவர்களால் செய்யப்படும் அதிகூடிய குற்றமான இலங்கையில் வாழும் சொந்த பந்தங்களான அகதிகளுக்குஉணவுப்பொருட்கள் கடத்துவதை பெரிய குற்றமாக கருதி பிணை வழங்கப்படுவதில்லை.
இதனால் பிணை வழங்கப்படாத நிலையில் குடும்பத்தலைவர்கள் தத்தமது குடும்பங்களை பராமரிக்க முடியாது பல்வேறுதுன்பங்களுக்கு உள்ளாகி பலர் தற்கொலை வரை சென்றுள்ளதை உங்களில் பலர் அறிவீர்கள்.
கேள்வி: இந்தவிடயங்களில் புலம்பெயர் வாழ் தமிழ்மக்கள் காத்திரமான தங்களின் பங்களிப்பை எவ்விதத்தில் வழங்கவேண்டும்என்று எதிர்பார்க்கின்றீர்கள்?
பதில்: நீதிமன்ற வழக்கு விடயங்களில் புலம்பெயர் வாழ் தமிழர்கள் பெரியளவில் பங்களிப்பேதும் செய்யமுடியாது. இருப்பினும்சிறப்புமுகாம்கள் என்ற பெயரில் இயங்கும் முகாம்களை மூடுவதற்கான தொடர் போராட்டங்களை ஐ. நா மற்றும் மனிதஉரிமைகண்காணிப்பு அமைப்புகள் முன்பாக மேற்கொள்ள வேண்டும். இதனூடாக இந்திய அரசிற்கும் தமிழ்நாட்டு அரசிற்கும்அழுத்தங்களை கொடுத்து சிறப்புமுகாம்களை அகற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும்.
இப்படியான போராட்டங்கள் புலம்பெயர் வாழ் தமிழர்கள் மாத்திரமன்றி தமிழ்நாட்டில் வாழும் மனித உரிமைகளை மதிக்கும்மக்களும் போராட்டங்களினூடாக அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும். இதற்கான ஒரு செயன்முறைத்திட்டங்களைபுலம்பெயர் வாழ் தமிழ்மக்கள் கட்டமைக்கவேண்டும். இதன்மூலம் தான் அதிகளவானதும் விரிவானதுமான தீர்வுகளைபெறமுடியும் என்றார்.
கேள்வி: சிறப்பு முகாம்கள் என்றால் என்ன?
பதில்: சிறைச்சாலைகளின் முன் சிறப்பு முகாம் என்ற பெயர்ப்பலகை இருந்தால் அது சிறப்பு முகாம். இல்லையென்றால்சிறைச்சாலை. அதுதான் வித்தியாசம். விசேடமாக சிறப்புமுகாம்கள் சித்திரவதைக்கூடங்களாக செயற்படுகின்றன. இந்தசிறப்புமுகாம்களில் எமது இலங்கைத்தமிழ் அகதிகள் படும் துயர், வெறும் வார்த்தைகளால் கூறிவிட முடியாது.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRaMVfv5.html#sthash.WXu4pQ20.dpuf

Geen opmerkingen:

Een reactie posten