[ ஞாயிற்றுக்கிழமை, 25 ஓகஸ்ட் 2013, 02:34.29 AM GMT ]
இந்திய அரசாங்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர்கள் இவ்வாறு ரணிலுக்கு உதவியளிப்பதாக தெரிவித்துள்ளனர். 13ம் திருத்தச் சட்டத்தை பாதுகாக்கும் நோக்கில் இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த தேவையான சகல உதவிகளையும் வழங்குவதாக அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் ரணிலிடம் தெரிவித்துள்ளனர்.
வடக்கில் சகல அதிகாரங்களுடனும் கூடிய தீர்வுத் திட்டமொன்றை முன்வைத்தல், இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு, போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை, குற்றவாளிகளுக்கு தண்டனை விதித்தல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து ரணில் விக்ரமசிங்கவுடன் இந்திய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இந்தப் பிரச்சினைகளுக்கு தமது ஆட்சியின் கீழ் தீர்வு வழங்குவதாக ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு உறுதியளித்துள்ளார்.
இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் பற்றிய முக்கிய தகவல்களை இந்திய ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜீ, வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் உள்ளிட்ட பலரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
டொசோவின் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய வகையில் ரணில் வாக்குறுதிகளை அளித்துள்ளதாக தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி கருத்து வெளியிட்டுள்ளார்.
http://www.tamilwin.net/show-RUmryIRZMVgw1.html#sthash.hjO4X0lD.dpuf
இராணுவத்திற்கு எதிராக குற்றம் சுமத்துவோரை அம்பலப்படுத்துமாறு கோரிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 25 ஓகஸ்ட் 2013, 02:29.53 AM GMT ]
இலங்கை இராணுவத்தினர் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக 6300 பேர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இலங்கைக்கு விஜயம் செய்யும் நவனீதம்பிள்ளையிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட உள்ளது.
மறைந்திருந்து இவ்வாறு குற்றம் சுமத்துவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச, முப்படைகளின் தளபதி ஜகத் ஜயசூரிய, இராணுவத் தளபதி தயா ரட்நாயக்க ஆகியோர் நவனீதம்பிள்ளையை சந்திக்க உள்ளனர்.
இதேவேளை, அரசாங்கத்திற்கு எதிராக குற்றம் சுமத்தும் தரப்பினரையே நவனீதம்பிள்ளை இலங்கை விஜயத்தின் போது அதிகமாக சந்திக்க உள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று குற்றம் சுமத்தியுள்ளது.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRZMVgw0.html#sthash.nId1ZgIo.dpufஇலங்கைக்கு விஜயம் செய்யும் நவனீதம்பிள்ளையிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட உள்ளது.
மறைந்திருந்து இவ்வாறு குற்றம் சுமத்துவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச, முப்படைகளின் தளபதி ஜகத் ஜயசூரிய, இராணுவத் தளபதி தயா ரட்நாயக்க ஆகியோர் நவனீதம்பிள்ளையை சந்திக்க உள்ளனர்.
இதேவேளை, அரசாங்கத்திற்கு எதிராக குற்றம் சுமத்தும் தரப்பினரையே நவனீதம்பிள்ளை இலங்கை விஜயத்தின் போது அதிகமாக சந்திக்க உள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று குற்றம் சுமத்தியுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten