தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 30 augustus 2013

உலகத் தமிழர் பேரவை(GTF) மங்கள சமரவீரவை சந்திக்கவுள்ளது !

2009ம் ஆண்டு போர் உச்சக்கட்ட நிலையை அடைந்தவேளை , பிரித்தானியத் தமிழர்கள் பாரிய போராட்டங்களில் ஈடுபட்டனர். அந்தவேளை தமிழர்களின் சக்தியை ஒன்றுதிரட்டி செயற்பட பிரித்தானியாவில் நிறுவப்பட்ட அமைப்பே பிரித்தானிய தமிழர் பேரவை(BTF) ஆகும். பின்னர் இந்த அமைப்பின் பேச்சாளராக இருந்த சுரேன் சுரேந்திரன் அவர்கள் அவ்வமைப்பில் இருந்து பிரிந்து உலகத் தமிழர் பேரவை என்னும் அமைப்பை ஸ்தாபித்தார். அதற்கு இமானுவேல் அடிகளாரை தலைவராகவும் நியமித்தார். காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி லண்டன் வந்திருந்தவேளை , அவரைச் சந்தித்த சுரேன் சோனியா முகத்தில் ஒளிவட்டம் தெரிந்தது என்று கூறி பெரும் சர்சையில் சிக்கினார். அது ஒருபுறம் இருக்க, சுமார் 15 நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புகளை இணைத்தே உலகத் தமிழர் பேரவையை(GTF) தாம் ஸ்தாபித்ததாக கூறிவந்த சுரேன் பின்னர் பல நாட்டு அங்கத்தவர்களை விலக்கியுள்ளார். 

தற்சமயம் மேற்குறிப்பிட்ட GTF அமைப்பானது சுமார் 5 நாடுகளின் பிரதிநிதிகளுடமன் மட்டுமே இயங்கிவருகின்றது என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். இன் நிலையில் சிங்கப்பூரில் வைத்து இவ்வமைப்பானது(GTF) ஒரு ரகசியக் கூட்டம் ஒன்றைக் கூட்டவுள்ளது. வரும் 31ம் திகதி நடைபெறவுள்ள இக் கூட்டத்தில் மங்கள் சமரவீரவும் கலந்துகொள்ள இருக்கிறார். மகிந்தரின் கட்சியில் அமைச்சர் பதவியில் இருந்த மக்கள சமரவீரை மகிந்தர் நிக்கினார். அன்று முதல் மங்கள சமரவீர தனிக் கட்சி ஒன்றை ஆரம்பித்துகொண்டு ரணில் விக்கிரமசிங்கவுக்கு தனது ஆதரவை வழங்கி வருகிறார். இன் நிலையில் சிங்கப்பூரில் நடக்கும் இம் மாநாட்டிற்கு பலர் ரகசியமாகச் சென்றுள்ளார்கள். இவர்கள் பூட்டிய கதவுக்குள் இருந்து தமிழர்களின் எதிர்காலம் பற்றி பேசப்போகிறார்களாம்.

அமெரிக்கா மற்றும் சுவிஸ் நாட்டு அரசுகளின் ஆதரவைப் பெற்று இவர்கள் தன்னிச்சையாக இவ்வாறு செயல்படுவது கண்டிக்கத்தக்க விடையம் ஆகும். ஒரு சில தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த தமிழர்களுக்கு தீர்வு காண முற்படுவது என்பது படு முட்டாள் தனமான விடையம் ஆகும். எது எவ்வாறு இருப்பினும், ஈழத் உள்ள தமிழர்களாக இருந்தாலும் சரி மற்றும் புலம்பெயர் தமிழர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் இதுவரை உலகத் தமிழர் பேரவையை இன்னும் சரி வர ஏற்றுக்கொள்ளவில்லை. இன் நிலையில் இவர்கள் தமிழர்களுக்கு ஒரு தீர்வுத்திட்டம் தருவதாக, பல நாடுகளுக்குச் சென்று பேசுவது என்பது குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிம் விடையமாகத் தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

Geen opmerkingen:

Een reactie posten