நாளை வெளியிட தயாராக இருந்த மெட்ராஸ் கஃபே திரைப்படம் தமிழில் வெளியிட மதுரை நீதிமன்றம் தடை விதித்ததையடுத்து, தமிழகத்தில் ஹிந்தியில் வெளியிட இருந்தது. தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம் வலுத்ததை அடுத்து அப்படம் தமிழகத்தில் வெளியாவது கடினம் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் திரையரங்கு உரிமையாளர்களும், மக்கள் மனதை புண்படுத்தும்படியான காட்சியமைப்புகள் கொண்ட திரைப்படங்களை நாங்கள் வெளியிட மாட்டோம் என்று அறிவித்துள்ளது. சென்னையில் மாணவர்கள் ஏற்கனவே போராட்டத்தை முன்னெடுத்து விட்டனர்.
இத்திரைப்படத்தை மும்பையில் வெளியிடக்கூடாது என்று மும்பை பாரதிய ஜனதா கட்சி தலைவர் அஷிஷ் செலார் கூறி இருந்தார், திரைப்படத்தில் காட்டப்படும் காட்சிகள் உண்மைக்கு புறம்பானவைகளாக இருக்கின்றன. பிரபாகரன் தீவிரவாதியாக காட்டப்படும் திரைபடம் வெளிவந்தால் அது தமிழர்களை அவமானப்படுத்துபோல் அமையும். அதனால் இந்தியாவெங்கும் கலவரங்கள் நடக்க வாய்ப்புள்ளது. ஆகவே மும்பையில் அந்த படத்தை திரையிடக்கூடாது என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மும்பையில் களத்தில் இறங்கி முதல் அடியை கொடுத்துள்ளனர் மும்பை பாஜக கட்சியினரும் மற்றும் தமிழ் அமைப்பினரும்.
இன்று மும்பை சினி மேச்க்ஸ் திரை அரங்கம் தமிழர்களால் முற்றுகையிடப்பட்டது. திரைப்பட சுவரொட்டிகள் கிழிப்தெரியப்பட்டு அனைத்து பதாகைகளும் உடைக்கப்பட்டது. இதனால் இப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.
சாதி மதம் அரசியல் கடந்து ஒற்றுமையாக களமாடினர் தமிழர்களுக்கு மும்பையில் சாதித்து விட்டனர். தமிழகத்தில் நம் பலத்தை காட்டுவோம் என்று கூறுகின்றனர் தமிழக தமிழர்கள்.
மெட்ராஸ் கபே எதிராக சென்னையில் மாணவர்கள் போராட்டம்
மெட்ராஸ் கபே படத்திற்குத் தடை விதிக்கக் கோரி சென்னையில் பல்வேறு மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
வீதி மறியலிலும் அவர்கள் ஈடுபட்டனர். மெட்ராஸ் கபே படத்திற்கு எதிராக அரசியல் கட்சிகள், தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள் என சகல தரப்பினரும் களத்தில் குதித்துள்ளனர்.
விடுதலைப் புலிகளை இழிவுபடுத்து்ம் இந்தப் படத்தை திரையிடக் கூடாது, தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இந்தப் போராட்டத்தில் தற்போது மாணவர்கள் தீவிரமாக இறங்கி வருகின்றனர். பல்வேறு ஊர்களிலும் சட்ட மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்க ஆரம்பித்துள்ளனர்.
சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் நேற்று மறியலில் ஈடுபட்டனர். இதனிடையே, பாலசந்தர் மாணவர் இயக்கம் மற்றும் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பில் சுமார் 50 பேர் சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னரில் இன்று காலை வீதி மறியல் போராட்டம் நடத்தினர்.
அப்போது, மெட்ராஸ் கபே படத்துக்கு எதிராக கோஷமிட்டதோடு, படத்தை வெளியிடக் கூடாது என்று முழக்கமிட்டனர். மாணவர்களின் இந்த திடீர் போராட்டத்தால் லஸ் கார்னரில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அங்கு சென்ற பொலிஸார் போராட்டக்காரர்களை கைது செய்து திருமண மண்டபம் ஒன்றுக்குக் கொண்டு சென்றனர்.
Geen opmerkingen:
Een reactie posten