தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 25 augustus 2013

கொமன்வெல்த் மாநாட்டிற்கு போகாதே! இந்தியப் பிரதமரை கண்டித்து தமிழ் நாட்டில் சுவரொட்டிகள்

இனவாத செயற்பாடுகளுக்கு எதிராக முஸ்லிம் கட்சிகள் இணையத் திட்டம்?
[ ஞாயிற்றுக்கிழமை, 25 ஓகஸ்ட் 2013, 08:47.58 AM GMT ]
இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இனவாத செயற்பாடுகள் தொடர்பில் இணைந்து செயற்படுவது என்று அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில முஸ்லிம் கட்சிகள் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரியவருகிறது.

மத்திய கிழக்கு நாடு ஒன்றில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போது இந்த இணக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதில் அரசாங்கத்துடன் கருத்து முரண்பாடுகளை ஏற்படுத்தி கொண்டுள்ள அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவர் மாகாண சபை அமைச்சர்கள் சிலரும் கலந்து கொண்டதாக அறிய கிடைத்துள்ளது.
இணைந்து செயற்பட விசேட அமைப்பு ஒன்றை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அதற்காக மத்திய கிழக்கு நாடு ஒன்றிடம் இருந்து நிதி உதவிகள் கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேவேளை மத்திய கிழக்கு நாடுகள் நிதி உதவிகளை வழங்கும் போதும், தொழிலாளர்களுக்கான வாய்ப்புகளை வழங்கும் போதும் முஸ்லிம் சமூகத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் மத்திய கிழக்கு நாடுகளிடம் கோருவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொமன்வெல்த் மாநாட்டிற்கு போகாதே! இந்தியப் பிரதமரை கண்டித்து தமிழ் நாட்டில் சுவரொட்டிகள்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 ஓகஸ்ட் 2013, 08:42.05 AM GMT ]
பிரதமர் மன்மோகன் சிங் கொமன்வெல்த் மாநாட்டிற்கு போகக்கூடாது என்று தமிழ்நாடு, பெரம்பலூர் நகரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் நடக்கும் கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது, அந்த மாநாட்டிற்கு பிரதமர் மன்மோகன் சிங் செல்லக் கூடாது என தமிழகம் முழுக்க எதிர்ப்புக் குரல் எழுந்து வருகிறது.
இந்நிலையில், பெரம்பலூர் நகரம் முழுக்க ”கொமன் வெல்த் மாநாடு நடக்கும் சிங்களவன் நாட்டிற்கு சிங் கிழவனே செல்லாதே’’ என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஒட்டப்பட்டிருக்கிறது.
பிரதமரைக் கண்டித்து ஒட்டப்பட்டுள்ளசுவரொட்டியினால் பெரம்பலூர் நகரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 http://www.tamilwin.net/show-RUmryIRZMVfo1.html#sthash.E24jsbOJ.dpuf

Geen opmerkingen:

Een reactie posten