இலங்கையில் சிங்களவர்களின் மனித உரிமைகளே மீறப்பட்டுள்ளதாகவும் சிறுபான்மையினரின் மனித உரிமைகள் மீறப்படவில்லை என்றும் சிங்கள ராவய அமைப்பு தெரிவித்துள்ளது.
சிங்கள ராவய அமைப்பின் உறுப்பினர்கள் இன்று முற்பகல் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன் கூடியிருந்தனர்.
இலங்கைக்கு வந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் மகஜர் ஒன்றை கையளிப்பதற்காகவே அவர்கள் அங்கு குழுமியிருந்தனர்.
அம்மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் மோதல்கள் இடம்பெற்றபோது விடுதலைப்புலிகளுக்கு இந்தியா உதவிகளை வழங்கியது.
சிங்களவர்கள் மீது தாக்குதல் நடத்தவே இந்தியா, புலிகளுக்கு இந்த உதவிகளை வழங்கியது. அத்துடன் இலங்கையில் உள்ள தமிழ், முஸ்லிம் சிறுபான்மை மக்களின் மனித உரிமைகள் மீறப்படவில்லை.
சிங்கள மக்களின் மனித உரிமைகளே மீறப்பட்டுள்ளது என சிங்கள ராவய அமைப்பின் மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIQVMWmp1.html#sthash.poJRmeaD.dpuf
Geen opmerkingen:
Een reactie posten