பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்ட நியமனக் கடிதங்கள் பலாத்காரமாக திரும்பப் பெறப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பட்டதாரிகள் மத்திய நிலையம் இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
கடந்த 14 ஆம் திகதி வழங்கப்பட்டபட்டதாரி நியமனங்களே உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உத்தரவில் நேற்று முன்தினம் இவ்வாறு திரும்பப் பெறப்பட்டுள்ளதாக பட்டதாரிகள் மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை, தெவுந்தர பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட நியமனக் கடிதங்களே காரணம் தெரிவிக்கப்படாமல் பலாத்காரமாக திரும்பப் பெறப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
7 வருடங்களுக்குபின் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்ட போதும் 6 மாதங்களில் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தும் அது இன்றும் நடைபெறவில்லை.
ஒரு வருடமும் ஆறுமாதங்களும் கழிந்துள்ள நிலையில் 50 ஆயிரத்து 823 பேரில் 22 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு நிரந்தர நியமனம் இதுவரை கிடைக்கவில்லை.
35 வயதிற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
http://www.tamilwin.net/show-RUmryIRXMVgqz.html#sthash.ZSk27snR.dpuf
Geen opmerkingen:
Een reactie posten