தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 31 augustus 2013

இறுதிப் போரில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த முயற்சித்த நவிபிள்ளை!- தடுத்து நிறுத்திய இல. அரசு !


இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இறுதிக்கட்ட போர் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் மலர் வலயம் வைத்து அஞ்சலி செலுத்த மேற்கொண்ட முயற்சியானது, அரசாங்கத்தின் கடும் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டதாக தெரியவருகிறது.
இலங்கை அரச படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இறுதிக்கட்ட போர் நடைபெற்ற பிரதேசத்தில் உயிரிழந்த விடுதலைப் புலிகளின் தலைவர்கள் உட்பட இறந்தவர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த ஆணையாளர் தீர்மானித்திருந்தாக கூறப்படுகிறது.
மனித உரிமை ஆணையாளரின் விஜயம் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சும் மற்றும் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் அலுவலகம் என்பன இணைந்து தயார் செய்திருந்த நிகழ்ச்சி நிரலில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவது பற்றி குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
எனினும் அவர் முள்ளிவாய்க்காலில் மலர் வளையம் வைத்து போரில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த போவதாக தெரியவந்ததை அடுத்து, மலர் ளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டால் கடும் மக்கள் எதிர்ப்பு நிலை ஏற்படும் என்று பாதுகாப்பு அமைச்சும், வெளிவிவகார அமைச்சும் தெரியப்படுத்தியுள்ளன.
இந்த செயற்பாட்டை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது என்று அரசாங்கம் இராஜதந்திர மட்டத்தில் அறிவித்ததை தொடர்ந்து, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் முடிவை மனித உரிமை ஆணையாளர் இறுதி நேரத்தில் கைவிட்டதாக தெரியவருகிறது.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIQVMWmo3.html#sthash.16rMkuTR.dpuf

Geen opmerkingen:

Een reactie posten